பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 இலக்கிய ஏந்தல்கள் முடிக்காமற்போனால் அவர்கள் மனம் அமைதியுறாது; முகத்தில் மகிழ்ச்சி தோன்றாது என்னவோபோல் இருப் பார்கள். கடமை முடிந்த பின்னரே அவர்கள் நெஞ்சில் களிப்பு களிநடம் புரியும். ஷாவின் எழுத்துக்களை, ஆங்கில இலக்கியங்களை விரும்பிப் படிப்பார்கள். தாம் படிக்கின்ற பொழுது இடையே வருகின்ற அரிய கருத்துகளை, சுவை யான செய்திகளை அங்கே உடனாசிரியர்கட்கும் படித்துக் காட்டி அவர்களையும் மகிழச் செய்வார்கள். அவர்களைச் சுற்றி எப்பொழுதும் ஆசிரியர் கூட்டம் இருப்பதைக் காண லாம் அவர்களைத் தன்னந்தனியே காண்பதென்பது அருமையிலும் அருமை. அவர்கள் இருக்குமிடம் கலகலப் பாக இருக்கும். அவர்களும் வாய்விட்டுச் சிரிப்பார்கன்; மற்றவர்களையும் மனமகிழச் சிரிக்கச் செய்வார்கள், சிந்திக்கச் செய்வார்கள். அவர்கள் கருத்தருவியில் நிற்பது சிசன் சமயத்தில் குற்றால அருவியில் குளிப்பதுபோல் இருக்கும். அவர்கள் பேச்சில், ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்துகள் எப்பொழுதும் வந்து விழுந்தவண்ணமாகவே இருக்கும். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீருற்றேபோல் அவர்கள் பேச்சில் நெஞ்சாழத்திலிருந்து கருத்துகள் பிறந்து குதித்தோடி வந்த வண்ணமே இருக்கும். டாக்டர் அவர்கள் பல்கலைக் கழகங்கள் பலவற் றோடும், தமிழ் வளர்ச்சி நிறுவனங்களோடும், சாகித்ய அகாடெமி'யோடும் தொடர்பு கொண்டுள்ளவர்கள். கல்லூரியில் 1939 ஆம் ஆண்டிலிருந்து 1961, ஜூலை 31-ஆந்தேதி வரை ஏறத்தாழ இருபத்திரண்டு ஆண்டுகள் நற்றொண்டாற்றினார்கள். இருபத்திரண்டு ஆண்டுகளில், பதினைந்து ஆண்டுகளில் ஒருநாள்கூட விடுமுறை எடுத்துக் கொண்டதில்லை என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது நம்மால் வியக்காமலிருக்க முடிவதில்லை. கல்லூரிப் பணிக்குப் பின்னரே பிற பணிகள் என்பதைக்