பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8R. turr. 297 கருத்திலே கொண்டு அதனைப் பல்லாற்றாலும் செயற் படுத்தியவர்கள் டாக்டர் அவர்கள் ஆவர். ஐந்தாம் தமிழ்விழா சென்னையில் நடந்தபொழுது 'சங்க இலக்கியம்’ எனும் பொருள் குறித்து நம் டாக்டர் அவர்கள் சொற்பெருக்காற்றினார்கள். இலக்கிய அரங் கிற்குத் தலைமைவகித்த அந்நாள் இலங்கை அரசாங்க அமைச்சர் திரு. சு. நடேசன் அவர்கள், டாக்டர் அவர் களைத் தமிழ்நாட்டின் இலக்கிய நோபெல் பரிசாளர்; என்று அவையோர்க்கு அறிமுகப்படுத்தினார்கள். டாக்டர் அவர்களுக்குத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களிடத்தில் மதிப்பு மிகுதி. இளமைதொட்டே அவர்மாட்டுப் பேரன்பு கொண்டு நெருங்கிப் பழகி வந்தார்கள். அவர்கள் பேசும் கூட்டங்களில் இவர்களை முன்வரிசையில் நிச்சயம் காணலாம். எக்கருத்துகளை யும், சிறப்பாக அரசியற் கருத்துகளையும் பழகு தமிழில் எளிமை. இனிமை செறிவோடு பேச முடியும் என்பதை நாட்டுக்கு முதன் முதலில் எடுத்துக்காட்டியவர் திரு.வி.க. அவர்கள்தாம் என்பது டாக்டர் அவர்கள் துணிபாகும். திரு.வி.க. அவர்களின் நினைவாக இவர்களின் பெரு முயற்சியால் செனாய் நகரில் தொடங்கப் பெற்றிருக்கும் திரு.வி.க. உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகக் குழுவில் ஒருவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார்கள்" முன்னர்ப் பொதுக்கூட்டங்களிற் பேசி அதன் மூலம் நன்கொடை வசூலித்துப் பெரும்பொருள் தந்தார்கள், இப்பொழுது தம் வருவாயின் ஒருபகுதியை ஆண்டு தோறும் அளித்து வருகின்றார்கள். அது மட்டுமன்றி. தம் நூல்கள் சிலவற்றின் வருவாயினை அப்பள்ளிக் கென்றே ஒதுக்கி வைத்துள்ளார்கள்.