பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 இலக்கிய ஏந்தல்கள் பெனெடிக்ட் (Benedict) என்பவர் ஒர் யாழ்ப் காணத்து ஒவியர்; தமிழ்நாட்டில் வாழும் அறிஞர்களையும் கலைஞர்களையும் நேரிற் கண்டு படம் வரைந்து செல்ல வேண்டும் என்று கடல் கடந்தும் வந்தவர். அவரவர் களைப் பார்த்துச் சித்திரங்கள் வரைந்தபொழு அவர்களைப் பற்றித் தாம் கொண்ட எண்ணத்தினையும் அவர் எடுத்தியம்பியுள்ளார். அவர் டாக்டர் அவர்களையும் கண்டார் : சித்திரம் வரைந்தார் : தம்கருத்தையும் கூறியுள்ளார். அது "கிரகித்து உணரும் ஆற்றல் படைத் தவர் வருமாறு : திரு.மு. வரதராசனர். வீர உணர்ச்சி நிறைந்தவராகவும் அதே சமயத்தில் சட்டத்திற்குப் புறம் பாகப் போகாத வராகவும் இருப்பார் இவர் மற்றவர்களை ஆளக்கூடிய தன்மை இவரிடம் புலப்படுகிறது. வாழ்க்கைப் போக்கு சுத்தமாக இருக்கும். கோபம் வெகு வேகமாக வரும்; வெகு வேகமாக மறையும். விவாதம் எழும்போது, விட்டுக்கொடுக்க மாட்டார் இவர் தத் துவக் கருத்துக்களை ஆராய்வதில் ஆர்வமும் திறனும் கொண்டவராக இருப்பார்.' டாக்டர் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கள்ளோ காவியமோ? எனும் நாவல் இன்றும் எத்தனையோ மக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக நிற்கின்றது. எத்தனையோ மணமக்கள் அதனாற் பெரும் பயன்பெற்றுத் தங்கள் வாழ்க்கையில் செம்மை துலங்குவ தாக அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். கடிதங்களுக்குத் தாமே பதில் எழுதுவார்கள்; பிறர் எழுதித் தாம் கையெழுத்திடுவதென்பது இவர்களிடம் கிடையாது. இவ்வளவு புகழ் பெற்றும் பணிகள் மிகுந்தும் இவர்கள் தமக்கென்று ஒர் உதவியாளரை இதுநாள்வரை வைத்துக்கொள்ளவில்லை. மக்கள் வாழ்விலே எளிமை வேண்டும். அதுவும் அஃது ஆசிரியர் வாழ்விலே பெரிதும்