Ꮽ0Ꮂ இலக்கிய ஏந்தல்கள் எதிர்காலத்தில் டாக்டர் அவர்களுக்குச் செய்யுள் நூல்கள் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்ப இருக் கின்றது. டாக்டர் அவர்கள் பண்பாட்டுத் துறையில் தலைசிறந்த இடத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் வாழ்வு எளிமையானது; அமைதியானது: எடுத்துக் காட்டானது; செம்மை அகத்தும் புறத்தும் செறிந்து. துலங்குதுை. அவர்களை இலக்கிய மேதை” என்று. அழைப்பதனைவிட, எண்ணிப் பார்ப்பதனைவிட, அவர்களைப் பண்பாட்டு மனித', 'ஒழுக்கக் குன்று", "சான்றோர்’, ‘அறவோர்’, என்று கண்டு தெளியும் பொழுது திறம் மறந்து செயல் மறந்து வியக்கத் தோன்றுகின்றது. தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் தம்முடைய வாழ்க்கைக் குறிப்பில் இவர்கள் குறித்து வரைந்துள்ளள கருத்துகளை ஈண்டு அகழ்ந்து தருதல் இவர்கள்தம் வாழ்வின் உரைகல்லாய் அமையும் செம்மை சான்றது. குறிப்பின் ஒருபகுதி வருமாறு : "வரதராசனாரி பேச்சிலும் எழுத்திலும் பர்னார்ட்ஷாவின் கருத்துக்கள் ஆங்காங்கே பொதுளும், அவர் பர்னாட்ஷா நூல்களைப் படித்துப் கடித்து ஒரு தமிழ் பர்னார்ட்ஷா, ஆனார் என்றும் கூறுதல் மிகையாகாது. பர்னாட்ஷாவைப் பார்க்கிலும் வரதராசனார் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது எனது ஊகம் பர்னாட்ஷா பலப்பல நூல்களை எழுதி எழுதி முதுமை எய்தியவர். இம்முதுமையில் அவர்க்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க்காட்சி "வாழ்க்கைக்குக் கிறிஸ்து வேண்டும்; பைபிள் வேண்டும்" என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராசனார்க்கோ அக்கருத்து இளமை யிலேயே முகிழ்த்தது. வாழ்க்கைக்குச் சமயம் தேவை: கடவுள் தேவை என்று இளமை வரதராசனார் பேசினார்;
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/304
Appearance