பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8.rum. - - - 303 'உலகப்பேரேடு முதலியன கல்வி வளர்ச்சியிலும் சமுதாய வளர்ச்சியிலும் கருத்துகொள்வோருக்கு நல்விருந்து. ட்ாக்டர் அவர்களுக்குச் சங்க இலக்கியங்கள். திருக் குறள், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசம், திருவருட்பா தாயுமானவர் பாடல்கள் இவற்றில் நிறைந்த அளவிற்கு ஈடுபாடு உண்டு. தனியானதோர் இடம்நாடித் தம்மை மறந்து வாய்விட்டு இசையுடன் இந்நூல்களையெல்லாம் படிப்பார்கள். டெல்லிக்குச் சென்று இரயிலில் திரும்பி வர நேர்ந்தால் வட நாட்டு நண்பர்களும் விரும்பிக் கேட்கும் வண்ணம் திருவாசகத்தை இசையோடு ஒதுவார்கள், திருவாசகத்தில் அகவல் பகுதி தவிர மற்ற அனைத்தும் இவர்களுக்கு மனப்பாடம், அண்மையில் இரஷ்யாவிற்கு இந்தியப் பண்பாட்டுக் குழுவில் ஒர் உறுப்பினராகச் சென்ற காலையில் இவர்கள் தம்மோடு எடுத்துச் சென்றது தாயுமானவர் பாடல்களாகும். சுவாமி இராமதீர்த்தரின் “In the woods of God-realisation' grairio Bri,G\pirgăușă, இவர்கள் விரும்பிப் படிக்கும் நூலாகும். அவர்தம் அறவுரையினை நாள்தோறும்படிப்பார். தெய்வ நம்பிக்கை கொண்டு காலையில் எழுந்ததும் இறைவனை எண்ணிக் கசிந்து பாடியே பிற பணிகளைக் கவனிப்பார்கள். மன அமைதியற்ற நோங்களிலெல்லாம் தியானத்திலேயே இவர்கள் மனம் பெரிதும் செல்லும், சமயத்தைப்பற்றி இவர்கள் கொண்டுள்ள தெளிவு ஒரு புத்துலகத்தைபுதுச் சமுதாயத்தைப் படைக்க வல்லது. பழமையில் வேர் கொண்டு புதுமையில் கிளைவிட்டுப்படர்வது பெர்ட்ரண்ட் provováb, (Bertrand Russell). Gegrrl -, . C F M . Joad வினோபாபாவே முதலியோர் கருத்துகளை ஆழ்ந்து படிப் பார்கள். அவர்கள் கருத்துக் கருவூலங்கள் உலகிற்கு உறுதி செய்வன என்பது இவர்களின் உறுதியான நம்பிக்கை.