பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.கா. 349. தானும் சேர்ந்து கெடுவது தவிர வேறுவழி இல்லாத வளாக இருக்கிறாள்.' i மனைவிக்கு உரிமை கொடு 'மலர்விழி என்னும் புதினத்தில் கலெக்டர் செல்வ நாயகம் தன் மனைவிக்கு அளவுக்கு மீறி உரிமை கொடுதி தவர். அவர் கூறுகிறார் : 'மனைவிக்கு உரிமை கொடு, உரிமையால் தீமை நேர்ந்தாலும் கவலைப்படாதே. இரண்டு மூன்று குடும்பம் உரிமையால் கெட்டாலும் சரி. தமிழ்நாடு சீர்ப்படும். ஆங்கில நாட்டைப்பார். அவர்களுடைய முன்னேற்றத்திற்குக் காரணம் அங்கே இருக்கும் குடும்ப உரிமைதான். ஆங்கிலேயன் தன் வீட்டில் ஒர் அறையில் தன் மனைவி இன்னொரு வனோடு பேசிக் கொண்டிருப்பதை நேரில் பார்த் தாலும் சினமோ வெறுப்போ கொள்ளமாட்டான். உள்ளே வரலாமா என்று கேட்டு மனைவியின் அனுமதி பெற்றுத்தான் உள்ளே கால் வைப்பான். அதுதான் நாகரிகம் என்று அங்கே மதிக்கப்படுகிறது. முரட்டுத்தனத்துக்கும் உடல் வலிமைக்கும் மதிப்பு உள்ள வரையில்தான் பெண்ணடிமை இருக்கும். அன்புக்கும் அறிவுக்கும் மதிப்பு ஏற்பட்ட உடனே பெண்ணுக்கு உரிமை பிறந்துவிடும்" அளவுக்கு மீறிய உரிமையினை மனைவிக்கு தந்து அதனால் செல்வநாயகம் வாழ்க்கை இறுதியில் அழிந்து போனது என்று மு. வ. அப்புதினத்தில் விளக்கவும் காண் கிறோம். அதுமட்டுமல்லாமல் ஒவியர் மோகனை உயிர்க்கு உயிராகக் காதலித்து மணந்த நிர்மலா இறுதியில் பண