பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

solitary. 43 மத்தியில் இவருக்குப் பெருங் கவிஞர்' என்ற மதிப்பை உண்டாக்கியது. இத்தகைய ஆங்கிலத் தாக்கத்தால் முகிழ்த்து, பாரதியாரால் தோற்றுவிக்கப்பட்டது புதுக் கவிதை. இனி, இப் புதுக்கவிதைகளின் நிலையை, அவற்றின் இலக்கியக் கூறுகள் வழி காண்போம். அவ்வாறு உள்ள நிலையை அறிந்தால்தான் இதன் நிலைபேறு பற்றி அறிய இயலும். இலக்கியக் கூறுகள் உருவம், உள்ளடக்கம், கற்பனை, உணர்ச்சி ஆகிய இன்றியமையாத இலக்கியக் கூறுகளுள் புதுக்கவிதையில் ஆளப்படும் பாங்கு இனிச் சுட்டப்படுகின்றது. வடிவம் இலக்கியத்தின் வடிவம் என்பது வெளிப்பாட்டு முறை யாகும். எதைச் சொல்வது, என்பது உள்ளடக்கமாகவும், எப்படிச் சொல்வது? என்பது வடிவமாகவும் கொள்ளப்படு கின்றது. * . இலக்கியம் என்பது குறிப்பிட்ட யாப்பு வகைக்குள்ளா கவோ, குறிப்பிட்ட வடிவ அமைப்புக்குள்ளாகவோ எக்காலத்திலும் சிறைப்பட்டு நிற்பதில்லை; வளர்ந்து வரும் சமுதாயத்தின் உணர்வுக்கும், மாறிவரும் காலத்தின் தேவைக்கும் ஏற்ற வகையில் விடிவாலும் அமைப்பாலும் பொருளாலும் புதுப்பு து வகையில் உருக்கொண்டு வளர்ச்சி பெறுதலே இலக்கியத்தின் இயல்பாகும். தொல்காப்பிய னார் காலம் முதல் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கவிதைக்கு நிகழ்ந்த மாற்றங்களையும் தோற்றங்களையும் நுணித் துணர்வார்க்கு இவ்வுண்மை தெளிவாகப் புலனாகும்.