பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6), tarr. - 45 என்பன போன்ற பாடல்களை இளங்கோவடிகள் ஒசை நயம்பட அமைத்துள்ளார். இதற்கு யாப்பமைப்பும், அதன் ஒசையமைப்பும் காரணம் எனலாம். சக்தி மறுமலர்ச்சிக் காலத்தில், இளங்கோவடிகளால் அறிமுகப் படுத்தப்பட்ட பாவினங்கள் மேலும் புதிய மெருகோடு வளர்ச்சியுற்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்திச்சுவையோடு யாப்பு வடிவங்களை இசைத் தமிழாக்கித் தந்தனர். - காப்பிய காலத்தில் பாவினங்களில் ஒருவகையாகிய விருத்தப் பாக்களின் வளர்ந்த வடிவ வேறுபாடுகளைக் காண்கிறோம். விரிந்து செல்லும் கற்பனைப் பெருக்கை விளக்க, அடிநீண்டு செல்லும் வடிவங்கொண்ட விருத்தப் பாவகையைப் புலவர்கள் தேர்ந்தெடுத்தனர். விருத்தப் பாக்கள் பலவகைச் சந்த வேறுபாடுகளால் பலவகை வடிவங்களில் எழுந்தன. பாக்களில் பயின்றுவரும் சந்த வேறுபாடு, ஒரே வகைப் பாவினத்தில் பலவகை வடிவ வேறுபாடுகளைத் தந்தது. ஆழநெடுந்திரை ஆறுகடந்திவர் போவாரோ? வேழநெடும்படை கண்டுவிலங்கிடும் வில்லாளோ? தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு - - - சொல்லன்றோ ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ - -கம்பராமாயணம்; கங்கைகாண் படலம், 15 என்ற பாடலில் வன்மைச் சந்தம் மிகுந்திருப்பதையும். பாடலைப் பயிலும்போதே வீரவுணர்வு தெறிப்பதையும் அறிய முடிகின்றது. - பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அணுங்கச் செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி