பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இலக்கிய ஏந்தல்கள் இவ்வாறாக் காலம் காலமாகத் தமிழ் யாப்பு வடிவம் மாறி வந்துள்ளது. ஆயின் இம்மாற்றங்கள் யாப்பு மரபு கட்குட்பட்டு வந்துள்ளன யாப்புக்குண்டான ஓசை நயத் துடன் வளர்ந்து வந்தன. புதுக்கவிதை முற்றிலும் யாப்பு மரபை மீறி வந்துள்ளது. இதனால் யாப்பால் கிடைக்கும் ஒசை இனிமையும், ஒலி ஒழுங்கும், பொருளுக்கேற்ற சந்த மும் புதுக்கவிதைகளில் அமைவதில்லை. கவிதையின் அடிப் படைக் கூறுகளில் ஒன்றான ஓசை நயம் புதுக்கவிதைகளில் அமையாததால் அவை படிப்பவர் மனத்தில் இடம் பெற முடியாமல் போகலாம். இதனால் உரைநடையாகவே புதுக்கவிதைகள் மதிக்கப்படக் கூடும். இந்நிலையிலிருந்து மாறி ஒலி ஒழுங்கும், ஒசைநயமும், பொருளுக்கேற்ற சந்தமும் அமையுமாறு புதுக்கவிதைகள் தோன்ற வேண்டியது இன்றியமையாததாகும். கவிதையில் அமையும் ഞെക്ക நயமும் படிப்பவர் மனத்தைக் கவர இன்றியமையாததாகும். கம்பநாடனின் ஆழ நெடுந்திரை’ என்ற பாடலைப் பொருள் தெரியாதவர் படித்தாலும் அதன் வீர, சின உணர்வை நன்கு அறிய முடியும், அது போலவே பஞ்சியொளிர் என்ற பாடலைப் பொருள் Q தரியாமல் படிப்பவர் அதன் மென்மைத் தன்மையை உணரமுடியும். இவ்வாறான அமைப்பு முறை கவிதைக்கு மிக இன்றியமையாததாகும். புதுக்கவிதைகள் ஒசை நயத்தோடு -916ճուԸեւյ வேண்டிய முறை அதன் நிலை பேற்றுக்கு வழி வகுக்கும். செவிநுகர் கனிகள் என்றழைக்கப்பட்டுவந்த கவிதை உணர்வு கட்புலனுக்குரியதாகச் சில புதுக் கவிதைகளில் உருணம் மாற்றித் தரப்பட்டுள்ளன.