பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.com. 47 பின்னி முடிச்சிடம்மா பிச்சிப்பூச் சூட்டிடம்மா என்னும் மொழிகளினி எக்காலம் கேட்பன்ஜயா நெஞ்சில் கவலையெல்லாம் நிற்காமல் ஒட்டும் அந்தப் புஞ்சிரிப்பைக் காணாது புத்திதடு மாறுதையா -ஆசியசோதி; மலரும் மாலையும் என்று தாய் மகனையிழந்து புலம்புவதாகக் கூறும்போது, அதன் யாப்பமைப்பு சிறந்த சந்தத்தைக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் யாப்பு வகைகளில் பலவகை வடிவ மாறுபாடுகள் தோன்றின. கோழி அருணாசலக் கவிராயர், கோபாலகிருட்டிண பாரதியார், இராமலிங்க அடிகளார், வேதநாயகம் பிள்ளை ஆகியோர் மறுமலர்ச்சிக் கவிதைகளுக்குத் தங்கள் காலத்தில் வித்திட்டார்கள். மொழி எளிமை, உணர்ச்சி, இனிமை ஆகியவற்றோடு கலந்த கீர்த்தனைப் பாடல் களாகிய இசைப்பா வடிவங்கள் தோற்றம் பெற்றன. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, இராமநாடகக் கீர்த்தனை சர்வசமயக் கீர்த்தனை ஆகியன இப்புது இலக்கிய வடிவங்களில் அமைந்தன. இவற்றில் இடை யிடையே அழகிய உரைநடைத் தொடர்களும் இடம் பெற்றன. பாரதியார் எளிமையான, இனிய சொற்களைப் பயன்படுத்திக் கவிதை யாத்தார். பேச்சு வழக்கிலுள்ள சொற்களைக் கையாண்டபோதும் பாடல் முறைக்கேற்ப அதை அமைத்தார். ஆயிரங்களான திேயவை உணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான்; சிச்சீ சிறியர் செய்கை செய்தான் - பாரதியார் பாடல்கள்; பாஞ்சலி சப *lhiur. 219 என்ற அடிகளில் சீச்சீ என்பதை கவிதையாகவே மாற்றி விட்டார் பாரதியார். - - ,