பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. உண்டாக்குவது நல்லதல்ல. மக்கள் வாழ்க்கைப் பிடிப்பேடு வாழ்ந்தால்தான் சமுதாயம் நல்லமுறையில் அமையும், எனவே எதிர்மறைக் கண்ணோட்டத்தைப் புதுக்கவிஞர் கள் மாற்றிக் கொள்ள வேண்டும். பாடுபொருள் சிறப்பான தாகவும், சமுதாயத்திற்கு வழி காட்டக்கூடியதாகவும் அமையுமானால் புதுக்கவிதைகள் மக்களால் வரவேற்கப் படும். கற்பனையும், உணர்ச்சியும் நல்லதை நோக்கியதாக அமைக்கப்பட வேண்டும். முடிவுரை - இலக்கிய வடிவம் காலந்தோறும் மாறிவந்தாலும், யாப்பு மரபுக்கு மீறிப் புதுக் கவிதைகள் அமைந்துள்ளன. நடை நல்லதமிழ் நடையாக அமையவில்லை. உத்திகள் என்ற நிலையில் படிமம், குறியீடு முதலியன பொருட் குழப்பத்துக்கு வழி வகுக்கின்றன. பெரும்பாலான புதுக் கவிதைகளில் ஒலிநயம் அமையவில்லை. உள்ளடக்கத்தில் சிறப்பான, தேவையான பொருள்கள் எடுத்துக்கொள்ளப் பட்டாலும், சில கவிதைகள் சொல்லடுக்குகளாக அமைந் துள்ளன. இந்நிலைகளெல்லாம் மாறி, சிறப்பான கவிதை கள் தோன்ற வேண்டும். மாற்றம் தேவிைதான்; ஆனால் வளர்ச்சி நோக்கிய மாற்றமாக அமைய வேண்டும். பழமையை முற்றிலும் புறக்கணித்துப் பழமையில் ஒன்றுமே இல்லை என்ற மனப்பான்மை பல புதுக் கவிதைகளில் தென்படுகின்றது. அவ்வாறின்றி நிலைபேறுடைய மானிட மதிப்புகளை மதிப்பதும் நிலைபேறுடைய மானிட மதிப்புகளையுடையதாகக் கவிதை படைப்பதும் புதுக் கவிதைகள் நிலைபேறடைய இன்றியமையாத் தேவை களாகும். படைப்புகள் சிறப்பாக அமையுமானால் அவை நிலைபேறடைவது உறுதி; ஆயினும் நிலைபேறு என்பது காலத்தால் அறியப்பட வேண்டிய நிலையாகும்.