பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.tarr, by வளர்த்துக்கொள்ளவில்லை. வானக்கூரையின் கீழ் சரிநிகர் சமானத்தராய் வாழும் வாழ்க்கை கைகூடுவது எந்நாளோ என்று ஏங்கினர் பாவலர். உலகம், நாடு, ஊர், சமுதாயம் என்ற நிலைகளில் சமத்துவமும், ஒப்புரவும், உருவாவதற்கு அடிப்படையான குடும்பத்தில் இவைகள் நிலவுகின்றனவா? பூவின் கிழத்தி, நாவின் கிழத்தி, திருமகள் மார்பன்' அர்த்த நாரீசர், உமையொருபாகன் என்றெல்லாம் நம் புராணங்கள் இந்தச் சமவுரிமையினையும், ஏற்றத்தாழ்வற்ற பால் பகுப்பினையும் காட்ட முயன்றிருக்க, கால வளர்ச்சியும் அறிவியல் நிகழ்வுகளும், பொருளாதார வளமும் நம் சிந்தனைப் பட்டறையில் கூரிய கருத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்க, ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் தாழ்த்தாத, ஒருவர் உரிமைக்கு ஒருவர் இடையூறாய் அமையாத சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோமா? பெண்ணுக்கு உரிமை நல்குவது இருக்கட்டும்; பெண்ணைக் கேவலப்படுத் தாமல் இருக்கிறோமா? பெண்ணைப் பாதிக்கும் படைப்புகளை நம் தமிழ்த்தாயே கருத்தரித்தாள் எனும் போது துன்ப அலைகள் நம் நெஞ்சில் எழாமல் (Iryrracorruprr? பெண் பிறப்பு இழிவானதா? "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டுமம்மா" என்றார் கவிமணி. பாரதியும், பாரதிதாசனும், திரு.வி.க.வும் தம் படைப்புகளில் பெண்ணுரிமையை வற்புறுத்திப் பேசியுள்ளனர். எனினும் அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில் பகுத்தறிவு வளர்ந்துள்ளதாகக் கருதும் இக்கால த்தில் பெண்பிறப்பு