பக்கம்:இலக்கிய தீபம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 95 எத்துணை யளவாகத் தமிழ் மக்கள் இந்நூலை அவாவின ரென்பது புனானாம். ஆங்கில நூற் பதிப்புக்கள் போலத் தமிழ் நூற் பதிப்புக்களை யெண்ணுதல் தவறு. இந்நாட்டில் வெளிவரும் பதிப்புக்களை யெண்ணின், மேற்குறித்த 3 பதிப்புக்களும் வெகு விரைவில் வெளிவந்தனவென்றே சொல்லவேண்டும். ஓலைச்சுவடிகள் பெற்று ஆராய்ச்சி செய்து இவை வெளியிடப்பட்டனவல்ல. ஆகவே, ஐயரவர் களுடைய பதிப்பு தமிழ் மக்களுடைய பேராவலை யெதிர் நோக்கியே வெளிவந்த தென்று கூறவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தார் இப்பதிப்பிற்கு வேண்டும் பொருளுதவி செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. இரு நன்று: அச்சின்வாய்த் தோன்றிய வரலாற்றினை இது காறுங் கூறினேன். இனி, முதன்முதலாகத் தொகுக்கப் பட்டு, குறுந்தொகையெனப் பெயர்கொண்டு வெளிவந்த வரலாற்றினைப்பற்றி ஒருசிறிது கூறலாமென்றெண்ணு கிறேன்.பிரதிகளின் இறுதியில், 'இத்தொகை முடித் தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் நூற்றைவர்; இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது' என்று காணப்படுகின்றது. அகநானூறு என்ற தொகைநூற் பிரதிகளின் இறுதியில் 'தொகுத்தான், மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் ; தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி' எனக் காணப்படு கின்றது. நற்றிணைப் பிரதிகளின் இறுதியில் 'இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' எனக் காணப்படுகின்றது. குறுந்தொகைப் பிரதியின் இறுதியிலுள்ள 'முடித்தான் ' என்பது தொகுத்தான் என்று பொருள்படு மெனக் கோடலே நேரிது. இஃது உண்மை யோடு பட்டதாயின், பூரிக்கோவும் உப்பூரி குடிகிழாரும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/104&oldid=1481704" இலிருந்து மீள்விக்கப்பட்டது