பக்கம்:இலக்கிய தீபம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 105 வெளியிட்டிருக்கின்றர்கள். எனது முடியும் அவர்களது. பாடமும் ஒன்றாதல் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். + இன்று இச்செய்யுளின் பாடபேத விசாரணையிற் புகும் அவசியம் இல்லை. இதன்கண் காணப்படும் சரித்திரச் செய்தியே நாம் ஆரசய்தற்குரியது. சோணைநதிக் கரையிலே பொன்மிகுதியாற் சிறப்புற்று விளங்கும் பாடலி யென்னும் வளமிக்க நகரத்தை நீ பெறுவாயாக' என்று தலைமகனது வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைமகள் கூறுகின்றள். எனவே, இச்செய்யுள் இயற்றப்பெற்ற காலத்தே பாடலிபுத்திரம் வளஞ் சிறந்த பெருநகரமாய் விளங்கிய தென்பது புலனாம். எக்காலத்து இவ்வாறு விளங்கியது? இதனை கிச்சயித்தற்குப் பாடலிபுத்திர நகரத்தின் சரிதத்தை நாம் ஆராய்தல் வேண்டும். பாடவி யென்பது முதலில் ஒருவகையிலும் சிறந்து விளங்காத ஒரு சிற்றூராக இருந்தது. இதற்குக் குஸுமபுர மென்ற பெயர் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. லிச்சவி என்னும் மரபினர்கள் படையெடுத்துவரவொட்டாது தடுப்பதன் பொருட்டு, அஜாதசத்ரு என்றும் அரசனும் கோட்டை யொன்று கட்டப்பெற்றது. இவ்வரசன் கி.மு. 500 முதல் கி.மு. 475 வரை ஆட்சிபுரிந்தான். இவனது பெயரனாகிய உதயன் (உதயணனென்றும் இவனை வழங் கினர்) இச்சிற்றூரை ஒரு நகரமாக்குவதற்கு கி. மு. 450-ல் அடிகோலின னென்றும் கூறப்படுகின்றது. பின்னர் சந்திரகுப்த னென்னும் மௌரிய வரசன் இதன்கண் சிற் சில காலங்களில் வசித்து வந்தான். இவன் கி. மு. 322 முதல் 298 வரை அரசாட்சி செய்து வந்தான். இவ்வர சாட்சிக் காலத்திலே கி.மு. 302-ல் மெகாஸ்தினீஸ் என்னும் கிரேக்க ரொருவர் ஸெல்யூக்கஸ் என்னும் அரசனால் தூதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/114&oldid=1481714" இலிருந்து மீள்விக்கப்பட்டது