பக்கம்:இலக்கிய தீபம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 இலக்கிய தீபம் இலாஞ்சனை ; இவை ஏழரசர்க்கு உரியன ; இது, 'கேழல் மேழிகலை யாழி வீணைசிலை கெண்டை என்றினைய பல் கொடி' (கலிங். கடவுள்.18) என்பதனாலும் ஒருவாறு விளங்குகின்றது' என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளார்கள். அன்றியும், பாடப்பட்டோர் வரலாற்றில் சேரன், சோழன், திதியன், எருமையூரன் இருங்கோ வேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் அரசர் எழுவர்க்குரிய ஏழு இலாஞ்சனையும் நாடும் அரச உரிமையும் உடையோன் ' என்றும்! எழுதினார்கள். இங்குக் கொடுத்துள்ள விவரத் திற்கு ஆதாரம் இருப்பதாகப் புலப்படவில்லை. எழுபொறி நாட்டத்துத் தாயம் அடைந்ததன் பின், 'ஏழு அரசர்க ளோடு முரணிச் சென்று வெற்றி கொண்டு தன் வலியைத் தோற்றுவித்தான்' என்று செய்யுள் கூறுகின்றது. லால், இவ்வேழு அரசர்களுக்கும் எழுபொறி நாட்டத் தாயத்திற்கும் நெருங்கிய அல்லது நேரடியான தொடர்பு இருப்பதாகக் கருதக்கூடவில்லை. ஆத இங்ஙனமாயின், ஏழிலாஞ்சனை என்பதன் கருத்து விளக்க மெய்தாது நிற்கின்றது என்றுதான் நாம் கொள் ளுதல் வேண்டும். உரைகாரர் "எழுபொறியையும் நாட் டத்தையும் நீங்காத அரச உரிமையை " என்று ஒரு பக்ஷாந்தரம் கூறி,"ஏழரசர் நாடும் கூடி ஒரு நாடாய் அவ் ஏழரசர் பொறியுங் கூடிய பொறியோடு கூடி நின்று நன் மையும் தீமையும் ஆராய்தல் எனினும் அமையும்" என்றும் எழுதியுள்ளனர். இப்பொருளும் ஆராய்ச்சிக்கு உரியதே. ஆனால், வடமொழி நூல்களிலே காணப்படும் ஒரு மரபு இங்கே ஒரு விளக்கம் தருகின்றது. இம் மரபு "மானஸாரம்" என்ற சிற்ப நூலில் (அத். 42) காணப்படுகின்றது. சக்கர 1. இது பிற்பதிப்புக்களில் மாற்றப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/135&oldid=1481735" இலிருந்து மீள்விக்கப்பட்டது