உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 இலக்கிய தீபம் 'சேரன்-செங்குட்டுவன்' என்ற நூலை மிகவும் பயன்படுத்தியவர்கள் சரித்திர அறிஞர்களே. இவர்களுள் டாக்டர் கிருஷ்ணஸ்வாமியையங்காரவர்கள், இந்நூலிற் காட்டிய சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு, தெற்கே படையெடுத்துவந்தவன் சந்திரகுப்தமௌரியன் அல்லது பிந்துஸாரனாதல் வேண்டுமென்றும் அப் படையெடுப்பு பொதியமலைவரை எட்டியதென்றும் தென்னிந்திய சரித்திரம் எழுதத்துணிந்தனர் (Beginnings of South Indian History, p.83-103). இந்நிகழ்ச்சிகளின் சமகாலத்தன சங்க இலக்கியங்கள் என்று கொள்ளுதல் பொருத்தமன்று என்பதும், காண்வ வம்சத்தினர் வீழ்ச்சிக்கும் ஆந்த்ர ப்ருத் தியர் எழுச்சிக்கும் இடைப்பட்டகாலத்தில் (அதாவது சுமார் கி.மு.30-க்கும் கி.பி.200-க்கும் இடையில்) அவை தோன்றியனவாதல்வேண்டும் என்பதும் டாக்டர் ஐயங்காரவர்கள் கருத்தாகும். ஸ்ரீ சத்யநாதையர் இப்படை யெடுப்பு பிந்துஸாரன் காலத்ததாம் என்பர்.1 இனி, மௌரியரைக் குறித்துள்ள சங்கநூற் சான்று களைக் கவனிப்போம். புறநானூற்றிலே ஒரு செய்யுளும் அகநானூற்றிலே மூன்று செய்யுட்களும் மோரியரைக் குறிப் பிடுகின்றன. பிற்கூறிய மூன்றனுள், மாமூலனார் இயற்றி யன இரண்டாம். இங்குக் காட்டிய நான்கு செய்யுட்க ளுள்ளும் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றற்கே பழைய உரையுள்ளது. இதனை முற்பட உணர்ந்துகொள்வது பெரும் பயன் தருவதாகும். இச்செய்யுள் வருமாறு : 1. A College Text Book of Indian 2. புறம்-175: கள்ளில் ஆத்திரையனார் அகம் - 69 : உமட்டூர்கிழார்மகனார் பரங்கொற்றனார் History vol. I. p.86. அகம்-251: மாமூலனார் "3 281:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/141&oldid=1500954" இலிருந்து மீள்விக்கப்பட்டது