பக்கம்:இலக்கிய தீபம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4** மௌரியர் தென் - இந்தியப் படையெடுப்பு 133 ... வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக விடைகழி அறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும் பலர்புர வெதிர்ந்த அறத்துறை நின்னே "வென்றி வேலையுடைய விசும்பைத்தோயும் நெடிய குடையினையும் கொடியணிந்த தேரினையுமுடைய நிலமுழுதும் ஆண்ட வேந்தரது திண்ணிய ஆர்சூழ்ந்த சக்கரமியங்குதற் குக் குறைக்கப்பட்ட வெள்ளிமலைக்கு அப்பாலாகிய உலகத் திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர் களால் நிறுத்தப்பட்டு இருபொழுதும் ஒருபெற்றியே நிலை பெற்றுவிளங்கும் பரந்த இடத்தையுடைய ஆதித்தமண்டி லத்தையொப்ப நாள்தோறும் இரவு பகல் என்னாமல் பலரை யும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய நின்னை " என்பது இதன் பழையவுரை. இங்கே ஆதித்தமண்டலத்திற்கு ஒப்பாக அறத்துறை யாகிய ஆதனுங்கன் கூறப்படுகிறான். ஆதித்தமண்டலம் இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்று விளங்குகிறது. ஆதனுங்கனும் நாள்தோறும் இரவு பகல் என்னாமல் பலரை யும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒருபெற்றியே விளங்குகிறான். புலவர் கூறக்கருதிய உவமம் இதுவே. ஆதித்தமண்டிலம் வெள்ளிமலைக்கப்பாலுள்ள உலகத்திற்கு இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டதாம். அற்ற வாயில்தானும் நிலமுழுதும் ஆண்ட வேந்தரது சக்கரம் இயங்குதற்குக் குறைக்கப்பட்டதாம். நிலமுழுதும் ஆண்ட இவ்வேந்தர் வென்றிவேலையுடையார்; குடையினையும் தேரினையும் உடையார். 'இவ்வேந்தராவார் சக்கரவாளச் சக்கரவர்த்திகள்' என்று உரைகாரர் விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/142&oldid=1500957" இலிருந்து மீள்விக்கப்பட்டது