பக்கம்:இலக்கிய தீபம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பத்துப்பாட்டும் - காலமுறையும் (70-72) தொலையா நல்லிசை யுலகமொடு நிற்ப.. புலவோர்க்குச் சொரியுமவன் ஈகை மாரியும் எனக் குறிக்கப்படுகின்றான். இந் நன்னனே, மதுரைக் காஞ்சியில், பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட் சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு (6189) எனக் குறிப்பிடப்பட்டவனாதல் தகும். எனவே இந் நான்கு நூல்களும் சமகாலத்தன என்று கொள்ளலாம். மலைபடுகடாம் இந்தான்கினுள் முற்பட்டதாகலாம். குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியரான கபிலரை, உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் தொண்டு தடந்தா ளாம்பல் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா தாளிடுஉக் கடந்து வாளமர் உழக்கி ஏந்துகோட்டியானை வேந்தர் ஓட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த தேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே (அகம்.78) என நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மதுரைக்காஞ்சி முதலிய நான்கு நூல்களுக்கும் குறிஞ்சிப்பாட்டு முற்பட்ட தாதல்வேண்டும். மேலும், கரிகாற்பெருவளத்தானது தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியுள்ளார் (புறம், 4). இவரது முதுமைக்காலத்து இளைஞராயிருந்தவர் கபிலர் என்பது பதிற்றுப்பத்தில் இவர்கள் பாட்டுக்களின் வைப்புமுறையால் விளங்கும். 1. இக்கருத்தே படச் செந்தமிழ் 4-ம் தொகுதியில் (பக்கம் 183 -193) நன்னன் வேண்மான் என்ற கட்டுரையில் எழுதப்பட் டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/16&oldid=1522976" இலிருந்து மீள்விக்கப்பட்டது