________________
28 இலக்கிய தீபம் டாக்டர் சாமிநாதையரவர்களும் தமது பத்துப்பாட்டுப்பதிப் பிற் பாடினோர்வரலாறு கூறுமிடத்தில் 'நக்கீரர் நாலடிநாற் பது' எனவே எழுதியுள்ளார்கள். இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரம் காணக்கூடவில்லை. 6 இறையனார் களவியலுக்கு உரைகண்டவர் நக்கீரர் என்பர். ஆரூ இதுபற்றி முற்காலத்துத்தானே கருத்து வேற்றுமை உண்டு. களவியல் உரைக்கு முன்னுரையாக அமைந்த பகுதியில் உம்பூரி குடிகிழார் மகன் உருத்திர சன்கனவான் செய்தது இத்தூற்கு உனர என்பாருமுளர். அவன் செய்திலன்; மெய்யுரை கேட்டானென்க' எனக் காணப்படுகிறது. இறைவனது செய்யுள் ஒன்றில் ('கொங்கு தீர் வாழ்க்கை ') குற்றங் கண்ட நக்கீரர்தாமே அவன் அருளிச் செய்த களவியலுக்கு உண்மை உரை கண்டார் எனக்கொள்ளுதல் மிகவும் அருமையான கற்பனையல்லவா! நக்கீரரே உரை கண்டவர் என்ற கொள்கையே உண்மை யெனக் கொள்வோம். இப் பெயருடையார் பலர் இருந்தனர். இவர்கள் வெவ்வேறு காலத்தினர். நக்கீர தேவனாரைப்பற்றி முன்பு குறிப்பிட்டேன். இவர்க்குக் கோயிலொன்று திருச்செந் தூ ரில் எடுக்கப்பட்டுள்ளது. (I. M. P. III, p. 1505). சமீப காலத்தில்தானும் ஆசிரிய நிகண்டை இயற்றிய ஆண்டிப்புலவர் தம்மைப் பாவாடை வாத்தியாரது மைந்தன் நக்கீரனெனக் கூறிக் கொள்கின்றார். மன்னு செஞ்சிச் சீமைசூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த வூற்றங்காலில் வாழ் வளையறுப் போர்குலன் பாவாடை வாத்தியார் மைந்தனாம் நக்கீரனே. இப்பலருள் களவியலுரை கண்டவர் யாவர்? இவ்வுரைக்கு முன்னுரை யெழுதியவர் உக்கிரப் பெருவழுதியின் காலத்த