பக்கம்:இலக்கிய தீபம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 30 மேற்காட்டிய அடிகளிலே மனையமைப்பிற்குரிய வட மொழிப் பெயர்க்குறிப்புக்கள் வந்துள்ளன. மேஷ ராசியி லிருந்து தொடங்கிப் பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் செல்கின்றமை குறிக்கப்படுகிறது. உரோகிணி நக்ஷத்திர மும் கூறப்பட்டுள்ளது. கிரேக்கர்களிடமிருந்து ராசியைப் பற்றிய அறிவு சுமார் கி.பி. 200-ல் தமிழ் நாட்டிற் புகுந் திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இதற் கேற்ப, யவனரும் நக்கீரரால் குறிப்பிடப்படுகின்றனர். எனவே சுமார் கி.பி.250-ல் நக்கீரரால் நெடுநல்வாடை இயற்றப்பட்டிருக்கலாம். கபிலர், பாரி, கரிகாலன் முதலி யோர்களெல்லாம் இந்தக்கீரருக்கு ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்டவராகலாம். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இவரெனவே கொள்ளத் தக்கது. சங்க காலம் புலவர் இவரேயாதல் வேண்டும். முருகாற்றுப்படை இயற்றப்பெற்றகாலத்தில் பென ராணிகச் செய்திகள் தமிழ் நாட்டிற் பரவிவிட்டன. சங்க காலத் தமிழ்வழக்காறுகளும் நன்குணரப்படவில்லையென்ம தும் மேலே காட்டப்பட்டது. ஆதலால், சங்கப்புலவராகிய நக்கீரருக்குப் பல நூறாண்டுகளின் பின் அவர் பெயர் கொண்ட பிறரொருவரால் முருகாற்றுப்படை இயற்றம் பட்டதாதல்வேண்டும். இவ்வாற்றுப்படை 11-ம் திருமுதை யிற் சேர்க்கப்பட்டுள்ளதும் இப்பிற்காலத்தையே ஆதரிக் கின்றது. இதன் ஆசிரியரை நக்கீர தேவநாயனார் என 11-ம் திருமுறை கூறும். 'பத்துப்பாட்டு சங்கநூலாயிற்றே! அதன்கண் உள்ள ஒரு நூல் சங்ககாலத்திற்குப் பின் தோன்றியதெனக் கூறன் அமையுமோ?' என்ற கேள்வி இயற்கையாக எழலாம். ஆனால், சில குறிப்புக்கள் ஞாபகத்தில் வைக்கத் தகுந்தன. தொகை நூல்களிற் பெரும்பாலனவற்றைத் தொகுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/48&oldid=1481526" இலிருந்து மீள்விக்கப்பட்டது