________________
66 இலக்கிய தீபம் மாறாதல் நன்குணரப்படும். இந்நெடுநல்வாடையிலும் ஏறக் குறையப் பத்து இடங்களில் ஏலாவுரை உரைத்துள்ளார். ஆசிரியர் நக்கீரர் இனி நக்கீரரைப் பற்றிச் சிறிது கூறி இந்த ஆராய்ச் சியை முடிக்கின்றேன். இவர் மதுரைக்கணக்காயனார் மகனா ரென்றே பெரும்பாலும் குறிக்கப்படுவர். கணக்காயர் என் போர் நூல் கற்பிக்கும் ஆசிரியர். 'கணக்காயர் ஒத்துரைப் போர்' என்பது திவாகரம். எனவே, இவர் தந்தையார் மதுரையில் நூல்கற்பித்த ஆசிரியன் ஒருவரா விருந்தா ரென்பது தெளிவாம். இவர் சங்கறுப்போர் குலத்திலுள்ளோ ரென்று சொல்லப்படுவர். அதற்கு ஆதாரம் திருவிளையாடற் புராணம் முதலியன. இக்குளத்தவர் முற்காலத்தே தனியே குடியிருந்து வந்தவரென்பது மணிமேகலையில் விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோ டிலங்குமணி வினைஞ ரீரீஇய மறுகும் என்ற அடிகளால் விளங்குகின்றது. அகநானூற்றிலே 24-ம் பாட்டிலே பிராமணரின் ஒருவகையினர் இத்தொழில்ல முற்காலத்துச் செய்தார்க ளென்று வெளிப்படுகின்றது. நக்கீரர் என்ற சொல் 'வாக்மி' என்னும் பொருளில் வந்த வடமொழித் தீர்பானபெயர் என்று செந்தமிழ்ப் பத்திரா சிரியர் கருதுகின்றார். கீர்-சொல். இனி இவரியற்றிய நூல் கள் முருகாற்றுப்படையும், கெடுரன்வாடையும், பதினொச் திருமுறையிற் சில பிரபந்தங்களு மாம் என்பர். ஆனால் நக்கீரர் என்ற பெயருடைய மூவர் வெவ்வேறுகாலத்து வாழ்ந்து இவற்றை இயற்றினார் என்றலே முடிவான துணிபு. 1. முருகாற்றுப்படை பற்றி யான் நிகழ்த்தியுள்ள ஆராய்ச் சியில் நக்கீரரைக் குறித்து விரிவாக எழுதியுள்ளேன்.