உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 65 வந்தானென்பதும் போரிலே புண்பட்ட வீரர்கள் புறக் கணிக்கப் படாராய்த் தக்கவாறு பாதுகாக்கப்பட்டு வந்தார்க ளென்பதும் நூலின் கடையடிகளால் விளங்குகின்றன. மக்கள் தாமும் குளிர் காலத்து நெருப்பெழுப்பிக் குளிர் காய்வதும் இருட்டியவுடன் பெண்கள் ஏற்றிய விளக்கினை நெல்லும் மலருந் தூவிக் கைதொழுதலும் அக்காலத்து வழக்கம். இதனை, பகுவாய்த் தடவிற் செந்தெருப் பார என்றும், நெல்லு மலருந் தூஉய்க் கை தொழுது என்றும் வரும் அடிகளால் உணரலாம். நச்சினார்க்கினியர் இனி, இந்நூற்கு உரைசெய்த நச்சினார்க்கினியரைப் பற்றிச் சிலவார்த்தைகள் சொல்லி நக்கீரனாரது சரித்திரத் தைக் கூறுகின்றேன். நச்சினார்க்கினியர் 16-ம் நூற்றாண் டில் இருந்தவரென்பது பலருடைய கருத்தாகும். தக்க சான்றுகளும் உள்ளன. இவர் மதுரைவாசியாகிய ஓர் அந்தணர். தென்மொழியிலும் வடமொழியிலும் பயிற்சிமிக் குள்ளவர். இவரது உரைத்திறமும் கூர்த்த அறிவும் பெரி தும் வியக்கற்பாலவாம். பத்துப் பாட்டுத் தவிர, கலித் தொகை, சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய அரும்பெரு நூல்களுக்கு இவர் சிறந்த உரைசெய்திருக்கின்றார். இத் துணைப் பெருமையாளராகிய இவர் பத்துப் பாட்டின்கண் ஒரோ விடங்களில் செய்யுளை அலைத்து முன்பின்னாகக் கூட் டிச்சொன்முடிபு காட்டிப் பொருள் கொள்ளுவர்.இதனை மாட்டு என்பதன்பா லாக்குவர். இது செய்யுளியற்கைக்கு இ. தீ. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/74&oldid=1481552" இலிருந்து மீள்விக்கப்பட்டது