பக்கம்:இலக்கிய தீபம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகை நூல்களின் காலமுறை 77 குறிஞ்சி பற்றிய செய்யுட்களையும், பதிற்றுப்பத்தில் செல்வக்கடுங்கோ வாழி யாதன் மீது 7-ம் பத்தையும் பாடியவர். எனவே, யானைக்கட் சேய்க்கு முற்பட்டவர் கபிலர். இவர் பாடிய ஐங்குறு நுற்றுப் பகுதியும் சேய்க்கு முற்பட்டதாதல் வேண்டும். பெரும்பாலும் ஐங்குறு நூறு தொகுக்கப் பெற்றதும் பதிற்றுப் பத்துக்கு முன்பே யாக லாம். பதிற்றுப்பத்தில் 6-ம் பத்தைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார். இப்புலவர் பெயர் முதன் முதலில் குறுந்தொகையில் காரணம் பற்றி வழங்கப்பட்ட தென்று முன்னமே கூறியுள்ளேன். எனவே, குறுந் தொகையின் பின் பதிற்றுப்பத்துத் தொகுக்கப் பட்டிருக்க வேண்டு மென்பதும் எளிதிற் புலப்படும். பதிற்றுப்பத்தின் இறுதிப்பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை மீது பாடப்பெற்றது என ஊகிக்க இடமுண்டு. பெரும்பாலும் இது தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை ஜீவதசையிலிருந்தவ னாகலாம். புறநானூறு தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை மரணமாகி விட்டான். எனவே புறநானூற் றின்முன்பாகப் பதிற்றுப்பத்துத் தோன்றியிருக்க வேண்டும். இனி, குறுந்தொகைக்கு ஐங்குறு நூறு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா என்று துணிதல் வேண்டும். ஐங்குறு நூற்றைத் தொகுத்த யானைக்கட்சேயைக் குறித்து அகத்தி. லும் புறத்திலும் பதிற்றுப்பத்திலு(?) மன்றி, ஏனைத் தொகை நூல்களில் யாதுங் கூறப்படவில்லை. எனவே, குறுந் தொகை முதலியற்றிற்கு ஐங்குறுநூறு பிற்பட்டதெனவே கொள்ளுதல் தகும். மேலும், குறுந்தொகை, நற்றிணை என்ற இரு நூலிலுமுள்ள செய்யுட்களுக்குத் திணை வகுக்கப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/86&oldid=1481688" இலிருந்து மீள்விக்கப்பட்டது