பக்கம்:இலக்கிய தீபம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 இலக்கிய தீபம் துள்ளன என்பது விளங்குகிறது. எனவே, இந்நூலிலேயே இப்புயைர்களின் பாடல்கள் முதலில் தொருக்கப்பட்டன வென்று கொள்ளுதல் வேண்டும். இப்பெயர்கள் புறநானூற் றுச் செய்யுட்களிலும் (193,254,278,249) வருகின்றன. ஆதனால் குறுந்தொகைக்குப் பிற்படத் தொகுக்கப்பட்டது புறநானூறு, நற்றிணையிலும் (277) தும்பி சேர்கீரனார் என்ற பெயர் காரணம் பற்றி அமைந்துள்ளதெனக் கொள்ளலாம். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்றும் ஏறத் தாழச் சம காலத்தில் ஒன்றின்பின் ஒன்றாகத் தோன்றியிருத் தல் வேண்டு மென்பறு மேலே காட்டப்பட்டது. எனவே புறநானூறு இம்மூன்றிற்கும் பின் தோன்றியிருத்தல் வேண்டும். அன்றியும் இந்நூல் அகநானூறு என்றதனோடு பெயரமைப்பில் ஒத்துள்ளது. இக்காரணத்தாலும் இந்நூல் அககாநூற்றின் பின் தொகுக்கப்பட்டதெனக் கொள்ளுதல் பொருந்தும். இனி, பதிற்றுப்பத்தினை எடுத்துக் கொள்வோம். ஐங்குறுநூறு தொகுப்பித்த யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் ன்றுள னாயின் நன்றுமன் (புறம்-53) இதற் என்று இரங்கிக் கூறியதாகக் காணப்படுகிறது. கேற்ப, சுபிலர் வடக்கிருந்ததைக் குறிக்குஞ் செய்யு னொன்றும் (230) புறகாஜத்தில் இடம் பெற்றுள்ளது இக்கபிலர் யானைக்கட்சேய் தொகுத்த ஐங்குறு நூற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/85&oldid=1481687" இலிருந்து மீள்விக்கப்பட்டது