பக்கம்:இலக்கிய தீபம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகை நூல்களின் காலமுறை 75 முடைத்தாம. இங்ஙனமாக, குறுந்தொகை, நற்றிணை, அக நானூறு என்ற மூன்று தொகை நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தன என்பது விளங்கும். எனினும், குறுந்தொகை முற்பட்டும், நற்றிணை இதன் பின்னும்,அகநானூறு இதற்குப் பிற்பட்டும் தொகுக்கப்பட்டன என்று ஒருவாறு துணியலாம். அகநானூற்றின் அடியளவு சிறுமை பதின்மூன்று ; பெருமை முப்பத்தொன்று எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அடியள வும் இத் தொகுப்பு முறையையே வலியுறுத்துகிறது. இனி ஐங்குறு நூற்றை நோக்குவோம். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்; தொகுப் பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. யானைக்கட்சேய் 'மேலோருலகம்' எய்திய செய்தியை புறம் 229-ம் செய்யுள் குறிக்கின்றது. இதனால், புறநானூறு தொகுக்கப் பெற்றதற்கு முன்பே ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்றதாதல் ஒருதலை இதனையடுத்து, புறநானூற்றைக்கவனிப்போம். இந்நூல் ஐங்குறு நூற்றின் பின் தொகுக்கப்பட்டதாதல் ஐயத்திற் கிடனின்றித் தெளிவாயுள்ளதென மேலே காட்டப்பட்டது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகைகளுக்கும் இது பிற்பட்டதா என்பதை நோக்குதல் வேண்டும். ஒரேருழவன், கயமனார், காக்கை பாடினியார் நச் செள்ளையார்,தும்பிசேர் கீரனார் என்ற புலவர் பெயர்கள் குறுந்தொகையில் (131, 9,210,392) வந்துள்ளன. இந்நூ லில் இப்புலவர்களின் பெயர்கள் காரணம்பற்றி அமைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/84&oldid=1481686" இலிருந்து மீள்விக்கப்பட்டது