உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 இலக்கிய தீபம் இத் தெய்லிகச் சரிதத்தோடு மட்டும் இந்நூலின் பெருமை அமைந்துவிடவில்லை. உரைகாரர்கள் பலரும் சங்க நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கின்றர்கள். அங்ஙனம் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப் படுகின்றது.' எனக் குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ சாமிநாதையரவர்கள் எழுதியிருக்கின்மூர்கள். இந்நூலி னின்றும் சுமார் 1000 மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்நூல் முற்காலத்தே மிகுதியாய்ப் பயிலப்பட்டு வந்ததென்பது தெளிவாம். தூமின் பெருமை கோக்கியும், அது மிகுதியாய்ப் பயினப் பட்டு வந்தமை நோக்கியும், இதற்குப் பேராசிரியர் உரை கெழுதினர். உரையெழுதிஞரென்பது கேவலம் கன்ன பரம்பரைச் செய்திமட்டும் அன்று ; நச்சினார்க்கினியரைப் பற்றிய உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றில், நல்லறிவுடைய தொல் பேராசான் கல்வியுங் காட்சியுங் காசினி யறியப் பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற் கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய இதுபொரு ளென்றதற் கேற்ப உரைத்தும் எனக் காணப்படுகின்றது. இதனால் பேராசான் தமது கல்விப் பரப்பும் அறிவுத் திறனும் விளங்கும்படி மிகச் செவ்விய உரையொன்று இயற்றினாரென்பதும், அவர் 20 செய்யுட்களுக்கு உரை யெழுதமில்லையென்பதும் புவனுகும். விடப்பட்ட இருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரையியற்றினார் என்பது மேலைப் பகுதியின் இறுதியடி தெரிவிக்கின்றது. இச்செய்தி, பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டுங்கலியும் ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்-சாரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/97&oldid=1481697" இலிருந்து மீள்விக்கப்பட்டது