உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 இலக்கிய தீபம் எழுதிச் செல்கின்றார். ஆகவே, பேராசிரியரிடத்துப் பெரு மதிப்பு உடையவர் இவரென்பது போதரும். இங்ஙனம் தம் மால் மதிக்கப்பட்டா ரொருவரது உரையை நச்சினார்க்கினியர் முற்றுவித்தாரென்றல் பெரிதும் ஏற்புடையதாதல் காணலாம். பேராசிரியர் 20 செய்யுட்களுக்கு என் பொருளெழுதாது விடுத்தனர் என்ற கேள்வி நமக்கு எழுதல் இயல்பே. அதற் குரிய விடையை நாம் ஆராய்ந்து தெரிவதில் பயன் யாது மில்லை. குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஐயரவர்கள் ஒரு காரணத்தைத் தம் பதிப்புரையிற் காட்டியிருக்கின்றார் கள். அக்காரணத்தை யொப்புக் கொள்ளுதலில் எவ்வகைத் தடையுந் தோன்றவில்லை. அதைப்போன்ற ஒத்த தகுதி யுடைய வேறொரு காரணமும் கூறுதல் கூடும். உரைகாரர் கள் பொருள் வெளிப்படையெனத் தாம் கருதுஞ் செய்யுட் களுக்கு உரையெழுதாது விடுதல் மரபு. ஐங்குறுநூற்றிற் பல செய்யுட்களுக்கு உரையின்மையும் ஈண்டு நோக்கத் தக்கது. இங்ஙனம் தாம் வெளிப்படையெனக் கருதிய 20 செய்யுட்களுக்கு உரைவரையாது பேராசிரியர் விடுத்திருப்ப, அவற்றின் அருமைப் பாட்டினை யுணர்ந்து நச்சினார்க்கினியர் தமது புலமையெல்லாந் தோன்ற உரை யெழுதினாரெனக் கொள்ளுதலும் அமையும். காரணம் எதுவாயினும் இரண்டு பேருரைகாரர்கள் குறுந்தொகைக்கு உரையியற்றினாரென் றல் உண்மை. இவ்வுரை இப்பொழுது அகப்படவில்லை. இதனைக் கற்று இன்புறும் பேறு நமக்கு இல்லையென்று வருந்துவதோடு நாம் அமைந்துவிட வேண்டியதே. இங்ஙனம் சரிதத்தாலும், பயிற்சி மிகுதியாலும், உரைச் சிறப்பாலும் பெருமையுற்று விளங்கிய குறுந்தொகை இப் பொழுதுதான் நன்கு பரிசோதிக்கப்பெற்று வெளிவந் துள்ளது. இதற்குமுன் ஒரு சில பதிப்புக்கள் வெளிவந் துள்ளமையை நான் மறந்துவிடவில்லை. முதன் முதலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/99&oldid=1481699" இலிருந்து மீள்விக்கப்பட்டது