பக்கம்:இலக்கிய தீபம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 91 இந்நூற் பதிப்பில் ஈடுபட்டு வெளியிட்ட பெருமை சௌரிப் பெருமாள் அரங்கன் என்றவருக்கு உரியது. இவர் எத் துணையோ முட்டுப்பாடுகளுக்கிடையில் 1915-ம் வருடத்தில் குறுந்தொகைப் பதிப்பொன்று வெளியிட்டனர். இந்நூலைப் பதிப்பித்தற்குப் பெருந்தகுதி வேண்டுமென்பதைத் தாமே நன்குணர்ந்தவர். ஆனால் தமக்கு இயல்பாக உரிய தமிழார் வத்திஞள் யாதாறுமொரு பதிப்பு வெளிவருமாயின், பின்னச் அது திருந்தமடையக் கூடுமென் றெண்ணி இப்பதிப்பிடு முயற்சியிற் புகுந்தவர். இவர் பதிப்பில், பதிப்பாளர்க்கு கேர்ந்த இடுக்கண்கள் கிடைத்த ஓபேச்சுவடிகள் இருந்த அலங்கோலங்கள், அச்சுவடிகளோடு போராடிய போராட் உங்கள், சேரியவரயுள்ள செய்யுட்களிலும் தம் இனங்கள் ணுக்குத் தோன்றிய நூதன வடிவங்கள், உரைகாணுதற்கு முயன்ற பயனில் முயற்சிகள் முதலிய அனைத்தும் நன்கு வெளியாகின்றன. ஒருசில உதாரணங்கள் காட்டுகின்றேன். 1 யாரினு மினியன் போன பின்னே என்று பதிப்பித்துள்ளார். இது யாரினு மினியன் பேரன் பினனே (குறுந். 85) என்று பதிப்பிக்கப் பெறல் வேண்டும். குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல்வேற் காட்டி னன்னாட். டும்பர் (குறுந். 11) என்று பதிப்பித்துள்ளார். இதில் இரண்டாமடி வற்வேற் கட்டி நன்னாட் டும்பர் என்று பதிப்பிக்கப் பெறல் வேண்டும். சிறுகோட்டுப் பெரும் பழந்தூங்கியாங் கிவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே (குறுந்.18) என்று பதிப்பித்தனர். இதன்கண் முதலடி நான்கு சீர்களை யுடையதாதல் உரைகாரர்கள் பலர்க்குங் கருத்தாம். எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/100&oldid=1481700" இலிருந்து மீள்விக்கப்பட்டது