உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம் 103 புது வளர்ச்சி நாடக திரைப்படம், வானொலி, நாடகம், டெலிவிஷன் என் னும் தொலைக்காட்சி, ஆகிய இவை பெருகிய காரணத் தால், இப்போது இங்கிலாந்து முதலான நாடுகளிலும் அரங்குகளும் நாடகங்களும் குறைந்துவருகின்றன. வீட்டினுள் இருந்து வானொலியின் நாடகங்களைக் கேட்பதும் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பதும் மக்களுக்கு வழக்க மாகிவிட்டன. அவற்றின் வாயிலாக, நடிகர்களின் கலைத் திறன் மக்களை நாடி அவர்கள் இருக்குமிடத்திற்கே வரு கிறது. மக்கள் நாடக மேடைகளை நாடிச் செல்ல வேண்டிய தில்லை. அடிக்கடி திரைப்படங்களை நாடிச் சென்று கலை விருந்து பெறுகின்றனர்? ஆகவே, எவ்வகையிலும் நாடக மேடை செல்வாக்கு இழந்துவருகிறது. இம்மாறுதல் வருந்தத் தக்கதே எனினும், தடுக்க முடியாததாக உள்ளது. (மேடை நாடகங்கள் கண்ணுக்கும் செவிக்கும் ஒருங்கே விருந்தாவன. வானொலி நாடகங்கள் செவிக்கு மட்டுமே விருந்தாவன.ஆதலின், வானொலி நாடகங்களில் உரை யாடல் மிகப் பொருத்தமாகவும் எல்வரவற்றையும் தானே விளக்கும் வகையிலும் அமைய வேண்டும். நாடக நிகழ்ச்சி களை எல்லாம், உரையாடலும் அதனோடு இயைந்த பின்னணி ஒலிகளுமே புலப்படுத்தியாக வேண்டும். அதனால் வானொலி நாடகங்கள் ஒரு சிறிது வேறுபட்டு, விளக்கம் மிக்க உரை யாடலுடன், அமைவன எனலாம். அறம் உணர்த்தல் காவியம் நாடகம் முதலியவற்றால் அறம் உணர்த்தப் படுகிறது. அவை உணர்த்தும் முறை வேறு.நேராக, வெளிப்படையாக அந்த்தையும் நீதிகளையும் அவை எடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/107&oldid=1681854" இலிருந்து மீள்விக்கப்பட்டது