உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இலக்கிய மரபு துரைப்பதில்லை. தாம் உணர்த்தும் கற்பனைவாழ்க்கையி லிருந்து அறமும் நீதிகளும் தாமே விளங்குமாறு அவை அமைந்துள்ளன. இயற்கை எத்தனையோ உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் உண்மைகளை நேரே உரைப்பதில்லை ; எழுதிக் காட்டுவதில்லை. இயற்கையைப் போற்றிக்காணக்காண, நம் உள்ளத்தில் அந்த உண்மைகள் தாமே பதிகின்றன. காவியங்களும் நாடகங்களும் அறம் உணர்த்தும் முறை அது போன்றதே ஆகும். ஆகை யால்தான் அவை சிறந்த கலைச் செல்வங்களாக விளங்கு கின்றன. காவியத்திலும் நாடகத்திலும் நல்ல மாந்தரையும் படைத்துக் காட்டலாம்; தீய மாந்தரையும் படைத்துக் காட்டலாம். ஒழுக்கமற்ற மாந்தரைக் காட்டுவதில் குற்றம் ஒன்றும் இல்லை. அவர்களின் எண்ணங்களையும் செயல் களையும் நன்றாக விளக்கலாம். சேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலப் புலவர் அவ்வாறு விளக்குவதில் வல்லவர். தீயோரைக் காட்டுவதில் தீமை இல்லை. அவர்களின் வாழ்க் கையை அழகுறப் படைத்துக் காட்டலாம்; திறம்படக் காட்டலாம். ஆனால், அந்த வாழ்க்கை கவர்ச்சி உடைய தாகக் காட்டப்படலாகாது; விரும்பத் தக்கதாகக் காட்டப் படலாகாது. கொலைஞரையும் கொள்ளைக் கூட்டத்தாரை யும் கற்பனையில் படைத்துக் காட்டுவதிலும் கலைஞரின் திறமை போற்றத் தக்கதாகும். ஆனால் கொலையும் கொள்ளையிடலும் வெறுக்கத் தக்கன என்று கற்பவர் உணருமாறு காட்டுதல் வேண்டும். அதுவே கலை வாயி லாக அறம் உணர்த்தும் முறையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/108&oldid=1681859" இலிருந்து மீள்விக்கப்பட்டது