உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 119 கெடுப்பது கூடாது என்றும்,அத்தகைய கதைகள் மிகத் தீமையானவை என்றும் அறிஞர் கூறுவர். செல்வாக்கு நாவல்களுக்கு உள்ள ஆற்றலும் செல்வாக்கும் மிகுதி. மக்கள் பெரும்பாலோர் படித்து உணரக் கூடிய இலக்கிய மாக இருப்பதால், அது சமுதாயத்தின் போக்கையே திருத்த வல்லதாகவும் மாற்றியமைக்கக் கூடியதாகவும் உள்ளது. இங்கிலாந்தில் சமுதாய வாழ்க்கையை மாற்றி யமைத்தலில் டிக்கன்ஸ் முதலானவர்கள் இயற்றிய நாவல் களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பர் அந்நாட்டு ஆராய்ச்சியாளர். அவ்வாறே டாஸ்ட்டாவெஸ்கி, செக்கோ, டால்ஸ்டாய் முதலானவர்களின் கற்பனைகள் ரஷ்ய நாட்டின் மாறுதலுக்குப் பெரிய காரணம்:என்பர். பிரெஞ்சு, இத்தாலி முதலான நாட்டு வரலாறுகளை ஆராய்ந்தவர்களும் அவ் வாறே நாவல்களின் செல்வாக்கை மதிப்பிடுவர். நிலைபேறு உலகத்தில் நிலைபெற்றுள்ள பெரிய காவியங்களை எல்லாம் ஆராய்ந்தால், அவற்றின் நிலையான வாழ்வுக்குக் காரணங்கள் சில புலப்படும். அந்தக் காரணங்களுள் ஒன்று: அவை மனிதர் யாவரும் எக்காலத்தவரும் உணரத் தக்க பொதுவான மனித உள்ளத்து உணர்ச்சிகளைக் கொண் டிருத்தலாகும். நெடுங் காலம் நிற்க வல்ல நாவல்களும், பலர்க்கும் பயன்பட வல்ல நாவல்களும், இத்தகைய

  • It is not the badness of a novel that we should dread, so much as its overwrought interest...... The best romance becomes dangerous, if by its excitement, it renders the ordinary course of life uninteresting, and increases the morbid thirst for useless acquaintances with scenes in which we shall never be called upon to act.

-A. H. R. Ball, Ruskin as Literary Critic, p. 58.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/123&oldid=1681862" இலிருந்து மீள்விக்கப்பட்டது