உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 125 அவ்வாறு புலப்படாத பண்புகளை அவர்களின் பேச்சால் புலப்படுத்தலாம். ஒருவர் தம்மைப் பற்றியே பேசும் பேக் சாலும்,மற்றவர் அவரைப் பற்றிப் பேசும் பேச்சாலும் புலப் படுத்தலாம்; கடிதங்கள், நாட்குறிப்பு முதலியவற்றாலும் புலப்படச் செய்யலாம். விளக்கம் மிக்கன வருணனை விளக்கம் மிக்க நாவலில்,ஏதேனும் ஒன்றனை மையமாகக் கொண்டு அதை விளக்குவதற்காகப் பலவற்றை யும் வருவித்து விளக்கிச் சூழ வைப்பர். சமுதாயத்தில் ஒரு பகுதியையோ, வரலாற்றில் ஒரு பகுதியையோ, வாழ்க்கைத் துறைகளில் ஒன்றையோ பற்றி அவ்வாறு விளக்கம் செய் தல் உண்டு. நாடகப் போக்கின நாடகப் போக்கில் அமையும் நாவலில், விளக்க வருணனைக்கு இடம் இல்லை; கதைக் கருவும் கதைமாந்த ரும் ஒத்த அளவில் இயைந்து பயன்படுத்தல் காணலாம். நிகழ்ச்சிகளும் செயல்களும் கதைமாந்தரை விளக்க, கதை மாந்தரும் அவர்தம் பண்புகளும் கருவை விளக்கும். இடைப் பிறவரலாக யாதும் அமைவதற்கு இவ்வகை நாவலில் இடம் இல்லை. இதில், உரையாடல் கவர்ச்சி மிக்கதாக விளங்கும். நாடகத்தில் அமைவது போல், ஒரு பெரிய சிக் கல் ஏற்பட, படிப்படியே அது விடுபட்டுத் தெளிவு பிறக்கும்; ஒரு நெருக்கடி மிகுந்து அதிலிருந்து விடுதலை ஏற்படும். It is part of the art of great masters of drama and fiction that they speak as little as possible in their own persons, and that they leave their characters to reveal themselves and each other by what they do and say. -T. G. Tucker, The Judgment and Appreciation of Literature, p. 122.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/129&oldid=1681967" இலிருந்து மீள்விக்கப்பட்டது