________________
126 இலக்கிய மரபு நாவல் எழுதுவோர் இந்த வேறுபாடுகளை எல்லாம் எண்ணி எழுதுவதில்லை. அவர் உள்ளத்தில் நிகழ்ச்சி பற்றியோ பண்பு பற்றியோ உணர்ச்சிகள் மேலெழுந்து நிற்க,அவற்றிற்கு ஏற்ப நாவல் அமைந்துவிடும். அவரு டைய மனப்பான்மைக்கும் திறமைக்கும் ஏற்ப, வருணனை விளக்கமோ நாடகப் போக்கோ சிறந்து நிற்கும். இந்த நான்கு வகைப் பாகுபாடுகளும் நாவல்களில் தெளிவாக அமைதல் அரிது. ஒன்றன் இயல்பு மற்றொன்றோடு கலந்து குழைந்திருத்தல் உண்டு. ஆசிரியர் கதை கூறல் ஆசிரியரே கதை கூறுவது போல் அமைவது ஒரு வகை நாவல். அதுவே பெரும்பான்மையான நாவல்களின் அமைப்பாகும். அது காவியத்தோடு ஒப்புமை உடையது. ஆசிரியரே கதை கூறுவதால் சில பயன்கள் உண்டு. அந்த நாவலில் ஆசிரியர் தாம் விரும்பும் கருத்துக்களை எல்லாம் இடையிடையே கூற முடியும். கதை மாந்தரின் பண்புகளை எல்லாம் விளக்க முடியும்; அவர்களின் உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் பழைய அனுபவங்களையும் எடுத்துரைக்க முடியும். ஒவ்வொரு செயலுக்கும் நிகழ்ச்சிக்கும் காரணங்கள் இன்ன இன்ன என்று அவ்வப்போது விளக்க முடியும். கதையின் ஒரு பகுதியை-ஓர் இடத்து நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து நிறுத்திவிட்டு, அடுத்தாற்போல் மற்றொரு பகுதியை வேறோர் இடத்து நிகழ்ச்சிகளை துரைக்க முடியும். ஓர் இடத்தைக் குறிப்பிடும்போது, அவ்விடத்துக் காட்சிகள் பலவற்றைத் தடையின்றி விளக்க முடியும். இவ்வாறு ஆசிரியர் எழுதுவதற்கு மிக்க திறமை வேண்டும்; ஏனெனில், காவிய ஆசிரியர் போல், இத் தகைய நாவலின் ஆசிரியரும் அந்தந்தக் கற்பனை மாந்த ராக நடித்து உணர்ந்து அடிக்கடி தம் உணர்ச்சிகளை எடுத்