உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 127 மாற்றிச் செல்ல வேண்டும். உலக நாவலாசிரியர்களில், இத் துறையில் டால்ஸ்டாய் கைவந்தவர் என்பர். ஆனால் ஆசிரியரே கதை கூறுவதாக எழுதும் இந்த முறையில் சில குறைகளும் உண்டு. ஆசிரியர், கதைமாந்தர் ஒவ்வொருவரின் உள்ளமுமாக மாறி மாறி அமைவது போல், நாவலைப் படிப்பவரும் மாறி அமைந்தால்தான், கதை சுவை பயக்கும். அவ்வாறு அடிக்கடி மாறிக் கற்பது அருமையுடையதாகும். ஒரேகதைமாந்தரின் உள்ளத்தோடு உறவு கொண்டு படித்து உணரும்போது பெறும் அனு பவத்தின் ஆழமும் வேகமும் இதில் ஏற்படுதல் அரிது. உணர்ச்சியும் கற்பனையும் அடிக்கடி மாறுவதால், கற்பவரின் உள்ளம் ஒரே நிலையில் இருந்து அனுபவம் பெற முடிவ தில்லை. தவிர, எழுதும் ஆசிரியர் பலவற்றையும் விளக்கிச் செல்லும் உரிமையுடன் எழுதுவதால், சில இடங்களில் சுவையற்ற பகுதிகளும் வேண்டாத பகுதிகளும் கலந்து விடும். கற்பவரின் உள்ளத்தின் வேகத்திற்கு அவை இடை யூறாகவும் நிற்கும். அதனால் அடிக்கடி கதை கவர்ச்சி இழந்துபோகும். கதைமாந்தரே கூறல் கதைமாந்தருள் எவரேனும் ஒருவர் கதை முழுதும் சொல்வதாக எழுதுவது நாவலில் மற்றொரு வகை. அம் முறையிலும் பயனும் உண்டு ; குறையும் உண்டு. அவ்வாறு ஒருவர் கதை சொல்லும்போது, கதைநிகழ்ச்சிகளும் உணர்ச் சிகளும் முழுதும் அந்த ஒருவருடைய அனுபவமாகவே அமைவதால், கற்பவர்க்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு+ அதனால் ஊக்கம் மிகுதியாகிறது. ஒருவருடைய அனுபவ மாகவே, ஒருவருடைய விருப்பு வெறுப்பாகவே முழுதும் அமைவதால், கதையில் இடையறவு இல்லாமல், கற்பனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/131&oldid=1681977" இலிருந்து மீள்விக்கப்பட்டது