உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 இலக்கிய மரபு வளரத் தொடங்கியதைக் கண்டு, அது 'உண்மை போல் நடிப்பதான வரலாறு' எனக் குறிப்பிட்டார்.* தமிழில் பவளக்கொடி மாலை, அல்லியரசாணி மாலை, புனந்திரன் தூது முதலியவை மக்களால் விரும்பிப் படிக் கப்பட்ட நிலை ஏறக்குறைய அதே காலத்திலேயே ஆகும். அவற்றை எழுதிய புலவர், இக்காலத்தில் பிறந்திருந்தால், மிகப் பெரிய நாவலாசிரியராக விளங்கியிருப்பது திண்ணம். தமிழ் நாட்டில் அக்காலத்தில் அச்சுப் பொறி பரவாமை யாலும், மக்கள் பெரும்பாலோர்க்கு எழுத்தறிவு பெறும் ஆர்வம் இல்லாமையாலும், தமிழ்உரைநடையும் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தமையாலும், மக்களின் கதைப் பசிக்கு உணவாக அந்தப் புலவர் அப்போது செய்யுள்வடி வில் அக்கதைகளை எழுதினார். அந்தக் கதைகளில் நாவ லுக்கு வேண்டிய சுவைகள் எல்லாம் இருத்தல் காண லாம். தொடக்கத்தில் - பதினேழாம் நூற்றாண்டில் - நாவல், பதினாறு தொகுதிகளாக (volumes) எழுதப்பட்டு மிக விரி வுடையதாக இருந்தது. அடுத்த நூற்றாண்டில் நான்கு தொகுதிகளின் அளவில் சுருங்கியது. சென்ற நூற்றாண் டில் மூன்று தொகுதிகளின் அளவில் குறைந்து,பிறகு ஒரு நாவல் ஒரு தொகுதியாக ஒரு நூலாக வெளிவரும் அளவினைப் பெற்றது. (ஆங்கில மொழியின் முதல் நாவல் எனும் பெருமை பெற்ற பாமெலா (Pamela) என்பது ரிச்சர்ட்சன் என்பவ ரால் 1740-ல் எழுதப்பெற்றது. அது காதல் பற்றிய

  • It is not possible today to define exactly what is a novel. Bacon called it a 'feigned history' four hundred years ago, and that is perhaps as near as we dare to set the boundaries.

-Richard Church, The Growth of the English Novel, p. 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/142&oldid=1681984" இலிருந்து மீள்விக்கப்பட்டது