________________
நாவல் 139 கடிதங்களாகவே அமைந்த நாவல் ; ஏழு தொகுதியானது டிபோ (Defoe) முதலான ஆசிரியர் சிலர், அதற்குமுன் கதைகள் எழுதியிருப்பினும் அவை நாவல் என்னும் இலக் கிய வகையாக எழுதப்பட்டவை அல்ல என்பர். (ரிச்சர்ட் சன் இரண்டு ஆண்டுகள் கழித்து 1742-ல் வெளியிட்ட ஜோசப் ஆண்ட்ரூஸ் (Joseph Andrews) என்பது, நாவ லுக்கு உரிய பல பண்புகளும் உடையதாய் விளங்கியது ஆசிரியர் வாழ்க்கையின் பல பகுதிகளையும் கூர்ந்து நோக் கிப்பெற்ற அனுபவம் அதில் நிரம்பி அமைந்தது எனலாம்.) வளர்ச்சி
இப் புதுவகை வளர்ச்சிக்குக் காலத்தின் போக்கே காரணம் என்று கூறி. அமைதி காண்கிறார் மிடில்டன் முர்ரே என்னும் ஆங்கில அறிஞர். பொருளியல் காரணங் களும் சமுதாயக் காரணங்களும் சேர்ந்து ஒவ்வொரு காலத் தில் ஒவ்வொரு வகை இலக்கியம் சிறந்து விளங்கச் செய் கின்றன என்பது அவர் கருத்து. அந்தக் காலத்தில் தோன்றும் ஆசிரியர், நூலெழுதி வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதாலோ, அல்லது, தம் உணர்ச்சியையும் கருத்தையும் பலர்க்குப் புலப்படுத்தும் ஆர்வத்தாலோ, அந்த இலக்கிய வகையையே தாமும் மேற்கொள்கிறார். பாட்டு இயற்றும் திறன் உடையவர்களும் நாடகம் இயற் றும் திறன் உடையவர்களும், அவ்வத் துறைகளை விட்டு, நாவல்கள் எழுதியுள்ளனர் என்பதை ஆங்கில நாட்டு இலக்கிய வரலாறு உணர்த்துகின்றது. ஹார்டி (Hardy), ஜார்ஜ் கிஸ்ஸிங் (George Gissing) முதலானோர் தம் விருப் பத்துக்கு மாறாகவே கதைத் துறையில் ஈடுபட்டனர். கீட்ஸ், ஷெல்லி, வோர்ட்ஸ்வொர்த் முதலானவர்கள் விதி விலக் காகப் பாட்டு மட்டுமே தம் துறையாகக் கொண்டனர்.
- J. M. Murry, The Problem of Style, p. 48.