நாவல் 141 அந்த வயதில் கவிஞர் என்ற புகழும், எழுதிய பாட்டுக்கள் வாயிலாகச் செல்வமும் பெற்றிருந்தாராம். அதன் பிறகு நாவல் எழுதத் தொடங்கினாராம். அவருடைய நாவல் களுக்கும் பாட்டுக்களுக்கும் பொருள் வகையிலோ அமைப்பு முறையிலோ வேறுபாடும் இல்லை என்பர்.* தமிழில் முதல் காவலாசிரியராக விளங்கும் பெருமை பெற்ற வேதநாயகம் பிள்ளையும் சிறந்த கவிஞராக இருந்து நாவல் எழுதினார் என்பது கருதத் தக்கது. சாசரும் சேக்ஸ்பியரும் பத்தொன்பதாம் நூற்றாண் டிலோ இந்நூற்றாண்டிலோ பிறந்திருந்தால், அவர்களுடைய எழுதுகோல் பாட்டுத் துறையில் மிகுதியாக முனையாமல், நாவல் துறையில் தொண்டாற்றியிருக்கும் என்று கருது வோரும் உள்ளனர். இந் நூற்றாண்டில் உரைநடையில் நாடகங்களும் ஆராய்ச்சிகளும் பல எழுதிய பெர்னார்ட்ஷா, "நான் சேக்ஸ்பியரின் காலத்தில் பிறந்திருந்தால், அவர் போல் செய்யுளாகவே நாடகங்கள் பல எழுதிக் குவித்திருப் பேன் " என்று எழுதியுள்ளார். ஆகவே, உணர்ச்சியனுபவம் மிக்க புலவர்கள், புதிய இலக்கியங்கள் படைத்துத் தர முன் வரும்போது, பெரும்பாலும் அவ்வக் காலத்தில் செல்வாக் காக உள்ள துறையையும் முறையையுமே மேற்கொள்கின் றனர் எனலாம். ஒரு சிலர், அவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாறாமல், எதிர்த்து நின்று தாம் விரும்பும் துறையிலும் Scott did not turn fo novel writing until he had reached his forties, and had already made fume and fortune as a poet. In returning from verse to prose narrative, however, the changed neither in manner nor matter. Richard Church, The Growth of the English Novel, p. 132. A Shakespeare and a Chaucer sould have been perfectly happy with our modern fashions and 'ourgmedern tools. J.M.Murry, The Problem of Style, p. 70.
பக்கம்:இலக்கிய மரபு.pdf/145
Appearance