142 இலக்கிய மரபு முறையிலும் உழைப்பது உண்டு. உலகம் வியந்து போற்றத் தக்க சிறப்பியல்பு அவர்களின் படைப்பில் இருந்தால் அல்லாமல், அவர்களின் உழைப்பை அந்தக் காலத்து மக்கள் ஏற்றுப் பயன் பெறுவதில்லை. நாவலின் வளர்ச்சிக்கு முதல் காரணமாகக் கூறத்தக்கது அச்சுப் பொறி எனக் கண்டோம். அதனால் ஆயிரக் கணக் கான நூல்கள் விரைவில் உருவாக முடிதலே, உரைநடையில் கதைகள் எழுதிப் பரப்பும் நம்பிக்கை அளித்தது. அதற்கு மேல், மக்களின் வாழ்வில் நேர்ந்த மாறுதல்கள் சில, புதுப் புதுக் கதைகள் தோன்றுவதற்கு வேண்டிய கற்பனையை வளர்த்தன எனலாம். அத்தகைய மாறுதல்களுள் சிறப் பாகக் குறிக்கத் தக்கன மூன்று :- 1. பெண்களின் உரிமை யெழுச்சியும் அதனால் நேர்ந்த சமுதாய மாறுதல் களும்; 2. அறிவியலின் புதுக் கருவிகளும் அவற்றால் நேர்ந்த வாழ்க்கை மாறுதல்களும் (தொழிற்சாலைகள், இயக் கங்கள் முதலியன) ; 3. உளநூல் ஒரு சிறந்த துறையாக வளர்ந்த வளர்ச்சியும், அதனால் மனிதனுடைய செயல்களுக் குக் காணப்பட்ட விளக்கங்களும். இவற்றால் தொன்று தொட்டு வந்த பழக்கங்கள் பல மாறின ; மரபுகள் பல பிறந் தன ; நம்பிக்கைகள் சில தளர்ந்தன. ஆகவே, தனி மனிதர் வாழ்க்கையிலும் சமுதாய அமைப்பிலும் மாறுதல்களும் புதுமைகளும் பல நேர்ந்தன. அவை புதிய கதைகள் எழுது வதற்கு உரிய கற்பனைகளைத் தந்தன. நல்லவர் என்றும் கொடியவர் என்றும் மக்களை இருவகையாகப் பகுத்து உணர்த்தும் காவிய மரபு போய், எந்த நிலைக்கும் காரணம் கண்டு வாழ்க்கை நுட்பங்களை வளர்ந்தது.'\ உணர்த்தும் புது நெறி வார இதழ்களும் திங்கள் இதழ்களும் நாவலின் வளர்ச் சிக்கு ஆற்றியுள்ள தொண்டு பெரிது. வாரந் தோறும்
பக்கம்:இலக்கிய மரபு.pdf/146
Appearance