உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

174 இலக்கிய மரபு ாக்கு மெல்ல மெல்லக் குறைந்துவரும். குறைந்து மே தவிர, அடியோடு நீங்கிவிடுதல் இல்லை. ஆகவே, பழைய மரபுகள் ஓரளவு இருந்துவர, புதிய இலக்கியங்கள் அந்த மரபுகளை ஒட்டியும் ஒட்டாமலும் காலத்திற்கு ஏற்ப அமைந்துவருதல் உண்டு. பழமை தமிழிலக்கியம் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் மரபுகளை உடையது எனலாம். ஏனெனில், இன்று உள்ள பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. அந்நூல் இலக்கிய மரபுகளைப் பற்றிக் கூறியுள்ளது. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்* என்று தொல்காப்பியனார் கூறியது கற்பனையும் உண்மையும் கூடிய இலக்கிய மரபையே ஆகும். மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும். என்ற விதிகளால், இலக்கியத்திற்கு மரபு இன்றியமை யாதது என்ற கருத்தை வலியுறுத்தினார். காலத்தால் மிகப் பழையனவாய் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னம் அமைந்தனவாய் இருப்பினும், அந்த மரபு களில் சில இன்றும் போற்றத் தக்கனவாக இருத்தல் குறிப்பிடத் தக்கது. எடுத்துக்காட்டாக, காதல் பாட்டுக்கள் அகத்திணைப் பாட்டுக்களாய்ப் போற்றப்படல் தொல்காப்பியம், பொருள், அகத்திணையியல், 53. தொல்காப்பியம், பொருள், மரபியல், 91, 92.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/178&oldid=1681942" இலிருந்து மீள்விக்கப்பட்டது