உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 175 வேண்டுமெனின், காதலரின் பெயர் முதலியன சுட்டாமல் பாட வேண்டும் என்பர் : மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்.* இன்று ஆங்கில இலக்கியத் துறையில் சிறப்பிடம் பெற்று விளங்கும் எலியட் என்னும் கவிஞர் கூறும் கருத்து இதற்கு அரண் செய்வதாக உள்ளது. இலக்கியத்தில் பாடப்படும் காதல், யாரோ ஒருவரை நோக்கிப் புலப்படுத்தும் உணர்ச்சி யாக இருப்பினும் அது பிறரால் கேட்கப் படுவதற்கென்றே இயற்றப்படுவதாகும். அவ்வாறு பிறரால் கேட்கப்படாமல், காதலர்க்கு மட்டுமே உணர்த்தத் தக்கதாயின், அதை எவரும் பாட்டாக இயற்றுவதில்லை. அத்தகைய உணர்ச் சிக்கு உரியது உரைநடையே அல்லாமல், பாட்டு அன்று என்பர். ஆகவே, பாட்டாக வடிக்கப்படும் உணர்ச்சி,அனை வர்க்கும் உரிய பொதுவான கற்பனைச் செல்வம் என்பதும், இன்னார்க்கு மட்டும் என்று குறிப்பிட்ட காதலுணர்ச்சி பாட்டு வடிவம் பெறத் தக்கது அன்று என்பதும் அவர் கருத்து ஆகும். பின்னணி உலகில் எந்தப் பொருளும் தனித்து நின்று உல் கத்தை விட்டு ஒதுங்கி நின்று விளங்க முடியாது. ஒரு மலர் பூத்தது என்றால், ஒரு செடி அல்லது கொடி, அதை அடுத்த மரம் அல்லது கிணறு, அடுத்துத் திரியும் விலங்கு அல்லது பறவை, கீழே பசும்புல்வெளி அல்லது கட்டாந். S தொல்காப்பியம், அகத்திணையியல், 54. † A good love poem, though it may be addressed to one pers on, is always meant to be overheard by other people. Surely, the proper language of love-that is, of communication to the beloved and to no one else is prose. -T. S. Eliot, The Three Voices of Poetry, p.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/179&oldid=1681953" இலிருந்து மீள்விக்கப்பட்டது