உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 இலக்கிய மரபு உள்ளது. நாடக மேடையை மறந்து, நாடக இலக்கியத் தைத் தனியே ஆராய்வதில் பயன் இல்லை. ஆகையால், தொன்றுதொட்டு நாடகம் எவ்வெவ்வாறு நடிக்கப்பட்டு வந்தது என்பதையும், இன்று நாடகக் கலை எவ்வாறு உள்ளது என்பதையும் அறிதல் கடமை ஆகின்றது. மூவகை நடிப்பதற்கு மட்டுமே உரிய நாடகம், படிப்பதற்கு மட்டுமே உரிய நாடகம், நடிப்பதற்கும் படிப்பதற்கும் ஒருங்கே உரிய நாடகம் என நாடகத்தை மூவகையாகக் கூறலாம். முன்னது மேடை யனுபவம் மட்டும் கொண்டு இலக்கியப் பயிற்சி இல்லாமல் எழுதப்படுவது; அடுத் த்து, மேடையனுபவம் இல்லாமல் இலக்கியப் பயிற்சி மட் டும் கொண்டு எழுதப்படுவது; மூன்றாவது, இருவகை யிலும் தேர்ச்சி பெற்ற கலைஞரால் எழுதப்படுவது. இந்த மூன்றாம் வகையான நாடகங்களே, கலைச் சிறப்பு உடை யவை என்பர். நாடகம் படிப்பதற்கு மட்டும் அல்லாமல் நடிப்பதற்கும் உரியதாய் விளங்க வேண்டுமானால், பலரும் பார்த்து மகி ழக் கூடியதாய் இருக்க வேண்டும். ஆகவே, பலர்க்கும் விளங்கக் கூடிய நடிப்புக்கள் இருக்க வேண்டுமே அல்லா மல், ஒரு சிலர்க்கு மட்டும் விளங்கக் கூடிய நடிப்புக்கள் இருந்து பயன் இல்லை. அதனால், நடிப்பு, உரிமை குறைந்த தாய், கட்டுத்திட்டமும் மரபும் உடையது ஆகிறது. கலைத் துறையில் பலர்க்குப் பயன்படும் வகையில்

  • Drama, to secure audiences large enough to be encouraging, must make a wide-spread appeal; but the limitations which this condition imposes upon action are very strict.

1.A.Richards, Principles of Literary Criticism p. 214.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/80&oldid=1681965" இலிருந்து மீள்விக்கப்பட்டது