உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 77 அமையும் போதெல்லாம், உரிமையான வளர்ச்சிக்குத் தடை அமைவது இயற்கையாகும். மெய் போலுதல் மொழி கருத்தை வெளியிடும் கருவியாகப் பயன்படும் போது, அதைப் பேசுவோர்க்கும் கேட்போர்க்கும் இடையே பொதுவான உடன்படிக்கை உள்ளது. அது எழுதப்படாத உடன்படிக்கை ; ஆயினும், என்றும் எவரும் போற்றத் தவறாத உடன்படிக்கை. எழுவாய் இங்கே பயனிலை இங்கே என்று சொற்களை அமைப்பதும், இன்ன சொல்லுக்கு இன்னபொருள் தான் என்று கொள்வதும் முதலானவை மேற்குறித்த உடன்படிக்கையின் பகுதிகள். அதுபோலவே, நாடகம் நடிப்பவருக்கும் நாடகம் காண்பவருக்கும் இடையே உடன்படிக்கை உள்ளது. நாடகத்தில் காணப்படுபவை உண்மையானவை அல்ல, (உண்மையான நிலவு அன்று, உண்மையான சோலை அன்று, உண்மையான பகை அன்று, உண்மையான கத்தி அன்று, உண்மையான போர் அன்று) என்று நாடகம் காண்பவர்க்குத் தெரியும்; தெரிந்தும் உணர்ச்சியோடு நாடகம் பார்க்கின்றனர். அவ்வாறுதான் பொய்யாக நடிப்போம் என்கின்றனர் நடிக்கும் கலைஞர்; ஏமாறுவதும் ஏமாற்றுவதுமாக இருந் தாலும் நாடகம் காண்போம், உணர்ச்சியையும் கருத்தையும் மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று மக்கள் விரும்பிச் செல் கின்றனர். இதுவே நாடகக் கலையில் அவர்களுக்கு இடையே உள்ள உடன்படிக்கை. ஆகவே, நாடகம் இயற்றும் புலவர், இதை உணர்ந்து, உண்மை போலத் தோன்றுமாறு படைக்க வேண்டும். வாழ்க்கையோடு ஒத்து வராத நிகழ்ச்சிகள் பல நாடக மேடையில் நிகழ்கின்றன; ஆயினும் நாடகம் காண்பவர் அவற்றைப் பொய் என்று ஒதுக்குவதும் இல்லை; வெறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/81&oldid=1681973" இலிருந்து மீள்விக்கப்பட்டது