பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


ஏழாம் பத்து - செல்வக் கடுங்கோ வாழியாதன் - கபிலர்
எட்டாம் பத்து -தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை - அரசில் கிழார்
ஒன்பதாம் பத்து - குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை - பெருங்குன்றுார் கிழார்


பத்துப் பத்து அகவற் பாக்களுள்ள பத்துப் பகுதிகள் சேர்ந்து அமைந்தமையின், பதிற்றுப் பத்து என்னும் பெயர் இதற்கு அமைந்தது. இப்பாடல்களைப் பிற்கால மக்கள் அடைதற்கு இயற்கை பேருதவி புரிந்தது என்னலாம். சேர நாட்டைச் சூழ்ந்துள்ள மலைத்தொடர்கள் பகைவர் தாக்குதலினின்றும் இத்தகைய நூல்களைக் காப்பாற்றிக் கொடுத்தன. சேர மன்னர்களும் தங்கள் செங்கோல் பெருமையையும் கொடைச் சிறப்பினையும் காத்து வைத்தற் பொருட்டு இந்நூலைப் போற்றி வைத்தனர். எனவே இயற்கையும் மன்னர் மரபும் போற்றி வைத்த இது போன்ற நூல்கா பிற்காலத் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த இலக்கியங்களாயின.

பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றை விளக்கும் குறிப்புக்கள் அமைந்துள்ளன: ஒவ்வொரு பாட்டிலும் பொருளாற் சிறப்புடைய தொடர் ஒன்றே அப்பாட்டின் பெயராகக் காணப்படுகிறது. இந்நூலில் உள்ள நாலாம் பத்துப் பாடல்கள் அந்தாதியாக அமையப் பெற்றுள்ளன. பாட்டுடைத் தலைவனுடைய பெயரும், செயல்களும், அவனைப் பாடினார் பெயரும், பத்துச் செய்யுட்களின் பெயரும், பாடிய புலவர் பெற்ற பரிசிலும், சேர அரசர் ஆண்ட கால அளவும் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் காணப்பெறும் பதிகத்தால் அறியமுடிகின்றது: இப்பதிகம் ஆசிரியப்பாவாகத் தொடங்கிக் கட்டுரை நடையாக முடிகின்றன . கிடைக்கப் பெறாத இரண்டு பத்துக்களைச் சார்ந்த பாடல்