பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

களில் ஒரு சில தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரியவந்தன. இந்நூலிற்குப் பழைய உரை ஒன்று உள்ளது.

கோபம், காமம். அச்சம், பொய்ச்சொல், கடுமை முதலிய குணங்கள், இவ்வுலகிலே அறநெறியிலே செல்லும் வண்டிக்கு முட்டுக்கட்டைகளாகும் என்பதை,

“சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்புமிக உடைமை,
தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து அறந்தெரி
திகிரிக்கு வழியடையாகும்”

என்ற பதிற்றுப்பத்துப் பாடல் எடுத்துக் கூறுகின்றது. இதிலிருந்து, பண்டைத் தமிழ் மக்கள் நல்லொழுக்கத்திலே நாட்டமுடையவர்களாய் விளங்கினார்கள் என்பதையும், உயிரினும் சிறந்ததாய் ஒழுக்கத்தினைப் போற்றினர் என்பதையும், அறநெறிக்கு மாறாக நடப்பதை அடியோடு வெறுத்தனர் என்பதையும் நாம் நன்கு அறிய முடிகின்றது.

பரிபாடல்

'ஓங்கு பரிபாடல்' என உயர்த்திக் கூறப்படும் இந்நூல் அகப்பொருள், புறப்பொருள் ஆகிய இரு பொருள்களையும் தழுவி எழுதப்பட்ட நூலாகும். சுருங்கக் கூறின் மதுரையின் சிறப்பினைப் பாட வந்ததே பரிபாடல். திருமால், செவ்வேள், ஆகிய கடவுளரையும், பொய்யாக் குலக் கொடியாகிய வையையையும் வாழ்த்துதலாக உட்பொருள் கொண்டு, இடையிடையே மதுரை நகர்ச் சிறப்பினையும், தமிழர்தம் பண்பு. அன்பு, காதல், வீரம், அறம் ஆகியவற்றை இந்நூல் விளக்கமுறக் கூறுகின்றது. மேலும் இந்நூல் இசை நலம் வாய்ந்தது. இன்று இந்நூலில் உள்ள பாடல்கள் இருபத் திரண்டே.இவற்றுடன் பழைய உரைகளிலே மேற்கோளாகக் காட்டப் பெற்ற இரண்டு பாடல்களும் உள. ஆனால் இந்