பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 கையொடு கை கோர்த்தும், படைக்கலங்களோடு படைக்கலம் தாக்கியும், உடம்பொடு உடம் புபட உராய்ந்த பொழுது நின்றனர். இத்தகைய பகை ஒன்றே நிலவியதே தவிர, செருக்கினையுடைய பலகடி கலங்கள் திருத்தற்குக் காரணமான பகை அங்கு ஒருபோதும் நிலவி : இல்லை. புறச்சேரி பட்டினத்தைச் சுற்றிலும் ஏழை மக்கள் வாழும் புகை சேரிகளும் இருந்தன. அப்புறச்சேரிகளில் பல குட்டிகளையுடைய பன்றிகளும் பலசாதிக் கோழி களும் திரிந்தன. உறை வைத்த கிணறுகளும் புறச்சேரியில் காணப்பட்டன. பரதவர் இருக்கை நீண்ட தூண்டிற்கோலைச் சார்த்தி வைத்திருக்கும் குறுகிய கூரையையுடைய குடியிருப்புகளின் நடுவில் மீன் உலரும் வெள்ளிய மணல் பரந்த முற்றத்தின் கண் ஆட வரும் பெண்டிரும் உண்டு ஆடி மகிழ்ந்தனர். நட்ட கல்லில் தெய்வமாக நின்றவனுக்கு அரணாக நிறுத்தி வைத்த வேலும் கேடயமும் போலக் கூரையின் மீது சார்த்திய தூண்டி ற் கோலும், மீனிடும் புட்டிலும் காணப்பட்டன. மீன்வலை உலரும் வெண்மணல் பரப்பு, நிலவின் இடையே பரவிய இருளைப் போலக் காட்சியளித்தது. இதனை, "நிலவடைந்த விருள் போல வலையுணங்கு மணல்' என்ற பட்டினப்பாலை வரிகளால் நாம் அறியலாம். இத்தகைய மணலையுடைத்தாகிய முன்றிலினையுடைய மனையிடத்தே முழுமதி நாளன்று புன்தலை இரும்பரதவர் பசிய தழையினையும் கரிய நிறத்தினையும் உடைய தம் மகளிரோடு கூடி, சினையினையுடைய சுறாவின் கொம்பை நட்டு, அதற்குத் தெய்வத் தன்மை ஏற்றி, அதனைக் கடல்