பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

காரணம், அக் கருத்துக்கள் அவற்றைப் பேசும் பாத்திரங்கங்களின் குணச்சித்திரத்தோடு இழைந்து நிற்கின்றன; எதையோ சாக்காக வைத்துக் கொண்டு, ஒரு சொற்பொழிவு மேடையை இடையில் உண்டாக்கும் தவற்றை டாக்டர் மு.வ. செய்யவில்லை. பாத்திரங்களின் இயல்பை உணர்த்தவும் கதையின் வளர்ச்சிக்கு உதவவும் பயன்படும் வகையில் அவர் உரையாடலில் இலைமறை காய்போல் நீதிக் கருத்துக்களையும், சீர்திருத்தக் கொள்கைகளையும் புகுத்தியிருக்கிறார், "கள்ளோ காவியமோ" நாவலில் அருளப்பன் வாயிலாகக் காதலுக்கும், காமத்திற்குமுள்ள வேறுபாட்டை நுட்பமாக விளக்குகிறார் :

"காமம் தன்னலமானது; காதல் தன்னலமற்றது. காமுகன் கயவன். அறிஞனும் சில வேளை காமுகனாய்க் கெடுவதுண்டு. கீழ் மகன் ஒருவன் அழகிய மாந்தோப்பைக் கண்டால், அதில் உள்ள கனிகள் பலவற்றையும் கவர்ந்து கொள்ள எண்ணுவான், கற்றுணர்ந்த அறிஞனும் பசித் துன்பம் பொறுக்க முடியாதபோது இரண்டொரு கனிகள் மட்டும் கவர எண்ணுவான். கீழ்மகன் தோப்பின் காவலாளியைக் கொல்லவும் துணிவான்; அறிஞனே காவலாளி உறங்கிக் கிடப்பினும் எழுப்பிக் கேட்க முயலுவான். இவ்வளவே இருவகையார்க்கும் வேறுபாடு. இருவகையார் உணர்வும் தன்னலமானதே. காமம் இதுதான். காதலோ பிறருடைய இன்ப துன்பத்தையே பொருளாகக் கருதுவது; தன்னை மறந்து பிறர் இன் பத்தில் இன்புறுவது; பிறர் துன்பத்தில் துன்புறுவது. காதல் உலகத்தில் காதலன் பாரி ஆவான். பேகன் ஆவான் முல்லைக் கொடியைக் கண்ட பாரி அதனை வேரோடு பறித்துத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல என்ன வில்லை; அல்லது அதன் பூக்களைப் பறித்து முகர்ந்து இன்புற வும் எண்ணவில்லை. பேகனும் ஆடும் மயிலைக் கண்ட போது வலை போட்டுப் பிடிக்க எண்ணவில்லை. அதைத் துரத்திப் பிடித்து அதன் பீலியைக் கவர எண்ணவில்லை. அசையும் கொடிக்கு அழகிய தேரை விட்டுக் காலால் நடக்கத் துணிந்.