பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 22 டும். பண்டு நாடகங்கள் அனைத்தும் அரசர்களையே தலைவர்களாகக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம் நாடகத்திற்குத் தலைவனாக இருப்பவன் தன்னேரில்லாத் தலைவனாக இருத்தல் வேண்டும் என்று நாடக ஆசிரியர்கள் கருதினமையே ஆகும். அதன் பின்னர் இயல்பான மாந்தனைத் தலைவனாகக் கொண்டு நாடகங்கள் தோன்றின. எடுத்துக்காட்டாக, "நந்தனர் சரித்திரக் கீர்த்தனை”யைக் கூறலாம். அந்நாடகத்தில்கூட நந்தனரைவிட வேதியர் பெருமைப்படுத்தப் படுகின்றார், அதற்குரிய காரணம் நாடகத் தலைவர் உயர்ந்த குலத்தவராக இருத்தல் வேண்டும் என்று எண்ணியதே ஆகும். அடுத்து, பள்ளு, குறவஞ்சி நாடகங்கள் எழுந்தன அவற்றில் தாழ்ந்த குல மக்கள் பேசப்பட்டனர். தற்காலத்தில் இவை ஒன்றிலும் சேராத சமுதாய நாடகமொன்றே சிறப்படைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தக்க தாகும். தன்னேரில்லாத் தலைவன்

   தொடக்கத்தில் இறைவனைத் தலைவனாகக் கொண்டு, தான் குறவஞ்சி இலக்கியம் பாடப்பட்டது. பின்னர் அரசர், வீரர், செல்வந்தர் முதலியோர் குறவஞ்சியின் தலைவராக வைத்துப்பாடப்பட்டனர். குற்றாலக் குறவஞ்சியின் தலைவன் திருக்குற்றாலத் துறையும் திரிசுடநாதரே ஆவார். அவர் எத்தகையவர் ? அவர் நான்முகன் ஆவார். அதற்குக் காரணம், அவர் முப்புரி நூலை அணிந்துள்ளமையே ஆகும். ஆனால் பாம்பணியும், குண்டலமும் இவர் அணிந்துள்ளாறே இவையிரண்டும் நான்முகனுக்குக் கிடையாதே! இல்லே, இல்லை. இவர் அருளுடைய திருமாலே ஆவார்.ஆனால் இவரிடம் காணுகின்ற நெற்றிக் கண்ணும் திரிசடையும் திருமாலுக்குக் கிடையாதே! அதோ! வலப்பக்கத்தில் நான்முகனும் இடப்பக்கத்தில் திருமாலும் வருகின்றனரே !. எனவே திரிகூடநாதர் வருகின்றார். இவ்வாறு, 'திரிகூட நாதர்' உலாவைக் கண்ட இளமங்கையர்கள் பேசுவது போல், ஆசிரியர் புதியவர் ஒருவரைக் கண்டவர் அவரைப் பற்றி பற்பலவாக