பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 24

 "ஒரு கைவளை பூண்ட பெண்கள் 
 ஒருகைவளை பூனமறந்
     தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
  இருதனத்து ரவிக்கைதனை;அரையிலுடை தொடுவார்பின் 
      இந்தவுடை ரவிக்கை யெனச் சந்த...கிடுவார்
  கருதுமனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மையெடுத்த 
       கையுமாய் ஒரு கண்ணிட்ட மையுமாய் வருவார்
  நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம் 
       நில்லானே மதனை இன்னம் வெல்லானே என்பார்"

என்று ஆசிரியர் மாட்சியுற அமைத்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து அப்பெண்களாக விளங்கி வருந்திக் கூறுவதைக் கேட்போம். வளையணிந்த நம் கைகள் இவனது அழகிய தோள்களில் பதியும்படி நாம் அவனைத் தழுவாமல் இருப்பதால் என்ன பயன் ? மேகத்தைப் பழிக்கும் நம் கூந்தல் அவிழ்ந்து தொங்கவும், நம் கைகளில் அணிந்த வளைகளைக் கவர்ந்து கொண்டான். இச்செயல் மாயமாகவன்றோ உள்ளது ? சடை வளர்த்த முறை இது தானே ? " இதனை ஆசிரியர், "இவ்வளைக்கை தோளழுந்த இவன் மார்பில் அழுந்தாமல்

   என்ன...... நமக்கெழுந்த வன்ன...... யென்பார் மைவளையும் குழல் சோரக் கைவளை கொண்டான்

இதென்ன

  மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார்"

என்று இதனைப் படிப்பவர் இன்புறும் வண்ணம் எடுத்தியம்பி உள்ளார்.

வன்ன மோகினி வசந்தவல்லி

  தன்னேரில்லாத தலைவனுக்கேற்ற தகுதி மிக்க தலைவி வேண்டுமல்லவா? குற்றாலக் குறவஞ்சி நூலில் காட்டப்