பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து: குழைந்தாட மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே ! " குடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை, நின்றாடப் புனை பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாட நய நாடகம் ஆடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே அணி ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினாளே ! ' :இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய தோவெவேன உயர் சந்திர சூடர் குறும் பல ஈசுரர் சங்கனி வீதியிலே மணிப் பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற் பந்துகொண் டாடினாளே!' மேற்கூறிய பாடல்களை உரத்து படிப்போம். தாளத்தோடு: படிப்போம் ; முடிந்தால், சிறிது இசையோடு படிப்போம். இசை அறிவு இருப்பின் பைரவிப்' பண்ணில் சாப்புத் தாளத் தோடு படிப்போம். அவ்வாறு படிப்பின், ஆசிரியர்தம் பாடல் இனிமையினையும் இசை அறிவையும் நம்மால் நன்குணர இயலும். அத்துடன் பாவை ஒருத்தி பந்தடிக்கும் படக்காட்சியினைப் பார்க்கும் உணர்வினையும் நாம் பெறு வோம். ஏன் ? பந்தடிக்கும் ஒலியினையும், சிலம்பு, தண்டை, வளை ஆகியவை எழுப்புகின்ற ஒலியினையும் நாம் கேட்டு மகிழ்வோம். இத்தகய ஆட்டத்தின் சிறப்பினை ஆசிரியர்,