பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

 பின்னரும் தோன்றிய உரைநடைகளை ஒப்பு நோக்கில் , அவர்தம் பேச்சு நடையின் செழுமையும் கொழுமையும் நன்கு விளங்கும். திரு. வி. க. அவர்களுக்கு முன்னுள்ள உரை நடைகள், ஒன்று வடசொற்கள் நிரம்பி இருக்கும் ; அல்லது செய்யுள் வரிகளே நிரம்பிக் காட்சியளிக்கும். திரு. வி. க. அவர்கள் கூடத் தொடக்கத்தில் அவ்வாறே எழுதின . இதற்கு அவர்தம் கதிரைவேற் பிள்ளை வரலாறு' என்ற நூலே சான்று கூறும். ஆனால் நாளடைவிலே அவர் பேச்சு நடையிலேயே எழுதலானார். பேச்சிலே நீண்ட சொற்றொடர்களுக்கோ அன்றி, திரிசொற்களுக்கோ இடமிரா. மேலும் திரு. வி. க. அவர்களது பேச்சிலே உணர்ச்சி பெருகிப் பொங்கி வழியும். உணர்ச்சிப் பேச்சிலே வெளிவருகின்ற சொற்றொடர்கள் சிறு சொற்றொடர்களாகவே இருக்கும் சொற்களும் செஞ்சொற்களாகவே யிருக்கும்.அவை எழுத்திலே புகும் போதும் அவ்வாறே இருக்கும் :இந்தியாவும் விடுதலையும்’ என்ற நூல் பேச்சு நடையில் அமைந்த ஒன்று. எனவே அந்நூலில் சிறுசிறு சொற்றொடர்களே நிரம்பியுள்ளன. பேச்சு நடை என்பதால் ஒரு கொச்சைச் சொற்களும் இருக்குமோ என்று எண்ணலாம். ஆனால் திரு. வி. க. அவர்களது பேச்சு நடையில் உள்ள சொற்கள் நம் உள்ளத்திற்கு விருந்தளிக்கும் செந்தமிழ்ச் சொற்கள் ஆகும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் அவர்' தம் உரைநடையில் பிறமொழிச் சொற்கள் காணப்படுகின்றன: கம்பியின் பருமன் குறையக்குறைய மின் ஓட்டம் மிக விரைவாகச் செல்லும். அது போன்று, சொற்றொடர்களின் நீளம் குறையக்குறைய அவற்றின் விரைவு மிகும். இவ்வுண்மையினை இந்நூலில் நாம் நன்கு காணலாம். இந்நூலில் காணும் ஒவ்வொரு சொல்லும் கயல் போலத் துள்ளும். நூலின் நடை குதித்து விரைந்தோடும் மான்போலவும் துள்ளும் கன்று போலவும், குமிழியிட்டுச் செல்லும் ஆ | போலவும், துள்ளித் துள்ளிச் செல்லுகிறது. அத்துடன்